"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்
நேற்று மரத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் சத்துக்கள் பற்றி பார்த்தோம்.
மருத்துவ குறிப்புகள்:-
சர்க்கரை நோய்:-
🌳சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்.
பெண்களுக்கு:-
🌳பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.
🌳தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.
🌳முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்காமலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.
🌳இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படத்தும்.
குழந்தைகளுக்கு டானிக்:-
🌳வளரும் குழந்தைகளுக்கு முருங்கை டானிக்காக இருந்து சிறந்த பலனை கொடுக்கும். முருங்கை கீரையை சுத்தமாக கழுவி சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
🌳அதை பாலுடன் கலந்து பிறந்த குழந்தைகளுக்கும்-வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்து வந்தால் இதிலுள்ள இரும்பு, சுண்ணாம்பு சத்து குழந்தையை திடமாக வளர உதவும்.
சிறுநீரகக் கோளாறு:-
🌳ஒரு கரண்டி முருங்கை இலையின் சாறை எடுத்து அதில் கேரட் (அல்லது) வெள்ளரி சாற்றை ஒரு டம்ளர் சேர்த்து கலந்து குடித்து வரவும்.
இவ்வாறு தினமும் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் நீங்கி விடும்.
குறிப்பு:-
சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.
தோல் வியாதிகள்:-
🌳சோரியாசிஸ் உள்ள இடத்தை கிருமி நாசினியால் துடைத்து, முருங்கை விதை ஒரு நாள் ஊற வைத்த தண்ணீரால் கழுவி வந்தால், சோரியாசிஸ் குணமாவதை கண் கூடாக பார்கலாம். அல்லது முருங்கைக் கீரையின் சாறை பிழுந்து தடவி வந்தாலும் சோரியாசிஸ் குறைவதை பார்கலாம்.
நாய்கடிக்கு:-
🌳நாய்க்கடியின் விஷத்தை முறிப்பதில் முருங்கை இலை சிறந்ததாக கருதப்படுகிறது.
🌳முருங்கை இலையோடு பூண்டு பல் இரண்டும், ஒரு துண்டு மஞ்சள்(விரல் மஞ்சள்), சிறிதளவு மிளகு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு உட்கொள்ள வேண்டும்.
🌳இதனையே நாய் கடித்த இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்தால் நாய் கடியால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். புண்ணும் விரைவில் ஆறிவிடும்.
இதன் மரம் பட்டுப்போவதை தடுப்பது மற்றும் கம்பளிப்புழு கட்டுப்படுத்தும் முறை பற்றி நாளைக்கு பார்ப்போம்.
மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment