"என்னை
அறிவீரா?? -- பூவரசம்
(அ) பூவரசு
நேற்று
பூவரசம் மரத்தின் பெயர்களை பார்த்தோம்..
பாகங்கள்:-
இதன் இலை, பூ,காய்,
பட்டை மற்றும் வேர் முதலியன
உள்ளன.
இலை:-
🌳இதய வடிவ
இலைகளைக் கொண்ட இந்த மரம்.
கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை.
🌳பீப்பீ..பீப்பீ...பூவரசம் இலையில் சுருட்டிய
விசில் சத்தம், இன்றைக்கு மத்திய
வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் நினைவுகளின் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்றைக்கு கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக இருந்தது.
🌳சிறுவர்கள் பூவரச
இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில்
வாய் வைத்து ஊதி மகிழ்வர்.
🌳சிறுசிறு விஷ
வண்டுகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் இயல்பு இதற்கு உண்டு.
இதனால், கிராமப்புறங்களில், வீட்டு முற்றத்தில் வண்ணக்
கோலமிட்டு, பூவரசு இலையில், பசுவின்
சாணத்தை வைத்து, அதன் மேல்
பூசணிப் பூ அல்லது பூவரசு
மரத்தின் பூவினை வைப்பார்கள்.
🌳ஸ்ரீ ஆதித்ய
ஹிருதய பெருமாள் கோவில் வியாழன் கிழமைகளில்
பூவரசம் இலையில் விளக்கு ஏற்றி
வழிப் படும் வழக்கம் உள்ளது.
🌳இலை,
காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக்
கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை
நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது.
பூ:-
🌳அழகிய மஞ்சள்
நிற பூக்கள் அதிகமாக காணப்படும்..
🌳அதேப்போல் பாதி மஞ்சள்
நிறத்திலும் பாதி சிவப்பு
நிறத்திலும் கொண்ட பூவரசம் பூக்கள்
காணப்படும்..
🌳குடசம் என்னும்
மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக்
காட்டுகிறது.
🌳இதில் பல
மருத்துவ குணங்கள் உள்ளன.
காய்:-
🌳பூவரசம் காய்
மஞ்சள் மற்றும் பச்சை கலந்த
நிறத்தில் காணப்படும்..
🌳பூவரசுக் காயில்
உள்ள தெஸ்பெசின் என்ற வேதிப்பொருளுக்கு புற்றுநோயை
எதிர்க்கும் ஆற்றல் அதிகம். மேலும்
வைரஸ் தொற்றைத் தடுக்கும் தன்மையும் இந்தக் காய்க்கு உண்டு.
பட்டை:-
🌳நூறு வருடங்களுக்கு
மேல் உள்ள பூவரசம் பட்டை
இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். சிவப்புக் கலராக காணப்படும்.
🌳சித்தர்கள்
இந்தப் பட்டையை காயசித்தி தரக்கூடிய
மூலிகை என்கின்றனர். இந்த நூறு வருட
மரத்தின் பட்டையை இடித்து சாறு
எடுத்து மூன்று மண்டலங்கள் அருந்தி
வந்தால் காயசித்தி கிடைக்கும்.
🌳மேலும் பல
மருத்துவ குணங்கள் கொண்டவை.
வேர்:-
🌳நூறு வருடங்களுக்கு
மேல் உள்ள பூவரசம் வேரில்
பல மருத்துவ குணங்கள் உள்ளன.
அரக்கு:-
🌳நம்மூர்களில் அரக்கைத்
தரும் மரமாக பூவரசமரம் உள்ளது.
🌳ஒரு மரத்தில்
அரக்குப் பூச்சிகள் இருந்தால் அவை இருக்கும் ஒரு
கொப்பை வெட்டி இல்லாத மரத்தில்
கட்டி, அரக்குப் பூச்சிகளை குடியேறச் செய்து அவை உண்டாக்கும்
அரக்கை கொப்புகளில் இருந்து சுரண்டிச் சேகரித்தனர்.
அப்படி சேகரித்த அரக்கை கொம்பரக்கு என்பர்.
நாளை மருத்துவ பயன்களை பார்ப்போம்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment