"என்னை
அறிவீரா?? -- தீமை செய்யும் சீமைக் கருவேலம்
🌵ஒவ்வொரு மண்ணும்
அதற்கேற்ற மரபான மரம் உட்பட
அனைத்தையும் கொண்டு இருக்கும்.
🌵தமிழர்கள் தங்களது
நிலத்தை ஐந்து வகையாக் பிரித்து,
அதை ஐந்திணைகள் என அழைத்து அதில்
ஒவ்வொரு வகையிலும் வளரும் மரம், செடிகளை
அறிந்து வைத்து செயல்பட்டார்கள்.
🌵பல மரங்களை
அதன் பயன்பாட்டு முக்கியத்துவம் கருதி கடவுள் எனவும்
கூறிக் கூட வணங்கினார்கள்.
🌵இயற்கையை அறிந்து,
புரிந்து, இயற்கையோடு இணைந்து, இயற்கையையே கடவுளாக வணங்கும் நீண்ட
நெடிய பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் தமிழர்கள்.
🌵ஆனால் இன்று
இந்த மண்ணிற்கு எந்த வகையிலும் பொருத்தப்பாடு
இல்லாத ஒரு மரம், சீமைக்
கருவேல மரம் நமது தலையில்
திணிக்கப்பட்டு, தமிழகம் எங்கும் நீக்கமற
நிறைந்து உள்ளது.
🌵சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும்
இது வேளாண் நிலங்களையும், பிற
வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்.
🌵 இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis
juliflora என்பதாகும்.
🌵மெக்சிகோ, கரிபியன்
தீவுகள், தென் அமெரிக்கா போன்ற
நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த நச்சு மரம் நமது நாட்டின் வளமான
பகுதிகளை சீரழிக்க சில அந்நிய சக்திகளால்
கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
மறு பெயர்கள்:-
🌵தமிழ் நாட்டில் சீமை
கருவேலம், வேலிக்காத்தான், காட்டுக்கருவேல் மரம், சீமை உடை,
சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி,
காட்டுக் கருவல், லண்டன் முள்,
வேலிக்கருவல் என்று பல்வேறு வட்டார
பெயர்கள் இதற்குண்டு.
🌵 தமிழ் நாட்டில்
இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia
nilotica) ஒத்து இருப்பதால் இவை கருவ
மரம் என்று அழைக்கப்படுகிறது.
🌵ஆனால்
அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறு
மரங்களாகும்.
நாளை இதன் தன்மைகள் மற்றும்
வரலாறு பற்றி பார்ப்போம்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment