"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்
நேற்று மரத்தின் பாகங்கள் பற்றி பார்த்தோம்.
பயன்பாடுகள்:-
🌳வலுவ்வில்லாதது, காகிதம் தயாரிக்க உபயோகிக்கலாம்.
🌳ஒரு சில இடங்களில், தீக்குச்சிகளும் தயாரிக்கின்றனர்.
மருத்துவ பயன்களும் மற்றும் சத்துகளும்:-
இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை.
முருங்கை இலை:-
”வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை"
- இது பழமொழி.
🌳முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,
வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.
🌳முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
🌳,ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி விட,7 மடங்கு அதிகம்.
ü கேரட்டில் உள்ள விட்டமின் ஏ விட,4 மடங்கு அதிகம்.
ü பாலில் உள்ள கால்சியம் அளவை விட,4 மடங்கு அதிகம்.
ü வாழைபழத்தில் உள்ள பொட்டாசிய அளவை விட,3 மடங்கு அதிகம்.
ü பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ விட,3 மடங்கு அதிகம்.
குறிப்பு:-
சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.
🌳முருங்கை இலை சாறு இரத்தை சுத்தம் செய்வதுடன் , எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
🌳ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்..
🌳தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும்.
🌳சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.
🌳மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
இலைகளில் இன்னும் பல மருத்துவ குணங்கள் இருக்கு.
இதன் பயன்கள் பற்றி நாளைக்கு பார்ப்போம்.
மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment