Friday, 14 April 2017

தாவரத்தின் குரல் -- பூவரசம் (பாகம்-3)


Image result for poovarasu tree images


"என்னை அறிவீரா?? -- பூவரசம் () பூவரசு

நேற்று  இலை, பூ,காய், பட்டை மற்றும் வேர் முதலியன பாகங்களை பார்த்தோம்.

மருத்துவ குணங்கள்:-
🌳பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கும் இலவச மருத்துவமனை. மிகச் சிறந்த தோல் மருத்துவர்.

🌳தோல் தொடர்பான பல நோய்களுக்கான தீர்வு இந்த மரத்தில் இருக்கிறது. சாதாரணமாக தோலில் ஏற்படும் எச்சில் தழும்பு தொடங்கி, தொழுநோய் வரையான பல்வேறு சரும நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

🌳பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது

🌳பூவரசம் பட்டையை பொடித்து சலித்து அதனுடன் சந்தனத் தூள் அல்லது வில்வ கட்டைத் தூள் கலந்து சருமத்தில் மீது பூசிவந்தால் சருமத்தில் உண்டாகும் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் அகலும்

🌳 பூவரசம் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் கசியும். அதை எச்சில் தழும்பு, சொறி, சிரங்கு, படை, விஷக்கடி உள்ள இடங்களில் தடவி வந்தால் முற்றிலும் குணமாகும்.
🌳நூற்றாண்டுக்கு சென்றதொடு நூண் பூ வரசம்வேர் தூறாண்ட குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை விதைப்பூப் பட்டையிவை கண்டாற் புழுத்தபுண்வி ரேசனமும் போம்.
 - அகத்தியர் குணபாடம்.
🌳குணம் - நூறாண்டுகள் சென்ற பூவரசம் வேர் நாட்பட்ட பெருநோயை நீக்கும்

🌳 பழுப்பிலை, பூ, விதை, காய், பட்டை முதலியவை  பழுத்த புண், காணாக்கடி, குத்தல், விடபாகம், பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, வெள்ளை இவைகளைப் போக்கும் தன்மை கொண்டது.
🌳பூவரசு இலையை நன்கு இடித்துத் துவையலாக மசித்து, பின் சூடுசெய்து துணியில் பொட்டலமாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும்.

🌳 உடலில் அடிபட்டு வீக்கமான இடங்களில் இந்தப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுக்க, வீக்கமும் வலியும் ஒருசேரக் குறையும்.

🌳மூட்டு வலியினால் நீர்க்கோத்துக் காணப்படும் வீக்கமும் சரியாகும். காய்ந்த பழுப்பு இலையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து சரும நோய்களுக்கு வெளிப் பூச்சாகப் பூசலாம்.
🌳பழுப்பு இலையைத் தீயில் கருக்கி சாம்பலாக்கி, அதனைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால், சரும அரிப்பு, கரப்பான் உள்ளிட்டவை குணமாகும்.
நாளை இதில் பெறப்படும் பொருட்கள் பற்றி பார்ப்போம்.

எழுத்து

#.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment