Tuesday, 4 April 2017

தாவரத்தின் குரல் -- பனை மரம் (பாகம்-4)



Image result for palm tree images




"என்னை அறிவீரா??  --  பனை மரம் 

வணக்கம் நேற்று பனைப் பழம் மற்றும் பனைக்கிழங்கு பற்றி பார்த்தோம்.

பனை ஓலை:-

🌴உலகின் மூத்த மொழி தமிழ்தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான்

🌴பனை ஓலை இல்லையென்றால் நாம் படிக்கும் 1330 திருக்குறள், வேதம் மற்றும் பல நூல்கள் அழிந்து இருக்கும்.

குருத்து:-

🌴பனையோலைக் குருத்து இள மஞ்சள் நிறம் கொண்டது. விரிந்து முதிரும் போது கரும் பச்சை நிறமாகத் தோற்றமளிக்கும்.

🌴காய்ந்து விழும் நிலையிலுள்ள ஓலைகள் மண்ணிறமாக ஆகி விடுகின்றன.

பனை கருக்கு:-

🌴கருக்கு என்றால் பனமட்டையை குறிக்கும்..இது கூரிய அளிவளால் செய்தது போன்ற கருக்கு மட்டை இருக்கும்.

பனை ஈர்க்கு:-

🌴இவை துடைப்பம் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம். ஆண்டு ஒன்றுக்கு தோரயமாக 3 கிலோ ஈர்க்குகள் வரை கிடைக்கும்.

பத்தல்:-

🌴பனைமட்டையில் மரத்துடன் இனைந்த பகுதியைதான் பத்தல் என்பர். இவற்றை அடித்து சீவினால் பனந்தும்பு கிட்டும். இவற்றை நீரில் ஊறவைத்து பிரஷ்கள் தயாரிக்க பயன்படும்.

மட்டை:-

🌴பத்தலுக்கும் ஓலைப்பகுதிக்கும் இடையில் உள்ள மட்டையை கருக்கு மட்டை என்பர் இவற்றை நீரில் ஊறவைத்து நாராகக் கயிறு தயாரிக்கலாம்.

🌴இந்த நார் நான்கு வகையாக பிரிக்கலாம் அவை கருக்கு நார்(தோல் பகுதி), அக்னி நார்(மட்டையின் குழி; பகுதி வழவழப்புள்ளது), புறனி நார்(உட் பகுதி), சோத்து நார் ( மிஞ்சியுள்ள பகுதி).பாளைஆண் பாளையில் பொங்கல் சமயத்தில் பொறிவாணமாகவும் மற்றும் சமயல் எரிபொருளாகவம் பயன்படுத்தலாம்.

பனைவேர்:-

 🌴ஆற்றுபடுகையில் உள்ள பனை மரத்தில் வேர் தரை மட்டத்தில ;நீண்டு செலலும் அவற்றை மட்டும் அளவுடன் வெட்டி எடுத்து பக்குவப்படுத்தி( தொலிசீவி) கெட்டியான நார் கிடைக்கும் மேலும் கூடை தயாரிக்க பயன்படுத்தலாம்.

முற்றிய மரம்:-

🌴நன்கு முற்றிய பனைமரம் ஒரு கன மீட்டர் 800 – 1200 கிலோ எடை கொண்டது. இவற்றை கொண்டு வய்க்கால் போன்றவற்றிர்கும் பன்டையகாலத்தில் பயன்படுத்தியது உண்டு.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠
















No comments:

Post a Comment