Friday, 14 April 2017

தாவரத்தின் குரல் -- பூவரசம் (பாகம்-4)


Image result for poovarasu tree images



"என்னை அறிவீரா?? -- பூவரசம் () பூவரசு

நேற்று  மருத்துவ குணங்கள் பற்றி பார்த்தோம்.

பொருட்கள்:-

🌳 பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு... "நாட்டுத் தேக்கு" என்று புகழப்படும் அளவுக்கு, வலிமையான மரமும்கூட.

🌳 அதனாலேயே... இந்த மரங்களை வெட்டி, தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என பயன்படுத்துவது தொடர்கிறது.

🌳பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் செய்வதற்கு அந்த காலத்தில் பூவரசு மரத்தின் பலகையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பூவரச மரத்தை சீண்டுவாரில்லை. ஆனாலும் இன்றைக்கும் பூவரசின் மகத்துவம் அறிந்தவர்கள் இதனை தேடித் தேடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

🌳மரத்தைப் பலகைகளாக அறுத்துப் பெட்டி, வண்டிச் சக்கரம், படகு, நாற்காலி, வண்டி, துப்பாக்கிக் கட்டை, வேளாண் கருவி, இசைக்கருவி, விட்டம் ஆகியவற்றைச் செய்யலாம். மரத்தை விறகாகப் பயன்படுத்தலாம். உறுதியான இம்மரக்கட்டை நீரால் பாதிக்கப்படாது.

இயற்கை உரம்:-

🌳இதன் இலை மற்றும் பூக்களை கொண்டு இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

🌳பூவரசு மரத்தின் அடி பகுதியில் உள்ள மண் ஈரப்பதத்துடன் காணப்படும்..

அழிவின் விளிம்பில்:-

🌳இதய வடிவ இலைகளையுடைய பூவரச மரம் தற்பொழுது அழிந்து வருகிறது. வீட்டுக்குத் தேவையான பலகைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் காற்றை சுத்தப்படுத்தும் சூழலியல் நண்பன் என பன்முகம் கொண்டது.

🌳 இந்த பூவரசு மரங்களை வீடுகள், சாலையோரங்கள், காலியிடங்களிலெல்லாம் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். புயலைத்தாங்கி வளரும் தன்மையும் உடையதால் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் பூவரச மரங்களை நடலாம்.

🌏புவியெங்கும் பூவரசு வளர்ந்தால் காற்று மாசு ஓரளவுக்காவது குறைந்து, பூமி சூடாவதில் இருந்து ஓரளவுக்காவது காக்க முடியும்.


🌳ஆனால் நகரங்களில் இந்த இலையின் பெயரே தெரியவில்லை. காரணம் மரங்கள் அழிக்கப்பட்டு மனைகளாக மாற்றப்பட்டதன் விளைவு.

🌳ஆனால் நாம் நினைத்தால் ஒருமரமாவது வீட்டு பின்புறம் வளர்க்கலாம் .
பூவரசு மரம் வளர்ப்பது பெரிய கஷ்டமே இல்லை ,பூவரசு மரத்தின் ஒரு சிறிய போத்தை வெட்டி நட்டுவைத்தாலே போதும்.

🌳அது துளிர் விடும்வரை சிறிதளவு தண்ணீர் விட்டுவந்தாலே போதும் பிரமாதமாக வளர்ந்துவிடும்.

🌳பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... இயற்கை மருத்துவர் என்ற கூறலாம்.

  🌳 சித்தர்கள்  காயசித்தி மரம் என்று அழைக்கப்படும் மரத்தை  மீட்டெடுக்கும் முயற்சியை நாம் மேற்கொள்ளவேண்டும்.

பூவரசம் மரத்தை பற்றி முழுமையாக பார்த்தோம்...

நாளை கருவேல மற்றும் சீமை கருவேல மரங்கள் பற்றி பார்ப்போம்....

எழுந்து

#.முகேஷ்*⁠⁠⁠⁠

No comments:

Post a Comment