"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்
நேற்று வேம்பு வளரியல்பு மற்றும் வகைகள் பற்றி பார்த்தோம்.
பாகங்கள்:-
வேம்பு இலை, பூ, பழங்கள், விதை, பட்டை
வேம்பு இலை:-
🌳வேம்பு இலைகள், இறகு வடிவமானவை.
கூர் நுனிப் பற்களுள்ள பல சிற்றிலைகளைக் கொண்டவை,
🌳ஒவ்வொரு சிற்றிலையும் சாதாரண இலையைப் போன்றே காணப்படும்.
🌳இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது.
வேம்பு பூக்கள்:-
🌳வேம்பு பூக்கள், சிறியவை, வெண்மையானவை, சிறு கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.
🌳வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களை கொண்டது.
🌳மார்ச்சு – ஏப்ரலில் பூக்கள் பூக்கும்.
வேம்பு பழம்:-
🌳வேம்பு காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். வேம்பு பழங்கள், 1.5செ.மீ. வரை நீளமானவை, முட்டை வடிவச் சதைகளையும் ,மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
🌳ஒவ்வொரு பழத்திலும் ஒரு விதை காணப்படும். வேம்பு பழங்கள், பறவைகள் விலங்குகளால் உண்ணப்பட்டு, அவற்றின் எச்சத்தின் மூலமாக விதைகள் பரவலடைகின்றன.
🌳ஜூன் – ஜூலையில் கனிகள்(பழம்) உருவாகும்.
வேம்பு விதை:-
இயற்கையாக வளர்தல்:-
செயற்கையான முறைகள்:-
மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment