"என்னை
அறிவீரா?? -- நன்மை தரும் கருவேலமரம்
தமிழர்களும்
மரங்களும்:-
🌵ஒவ்வொரு மண்ணும்
அதற்கேற்ற மரபான மரம் உட்பட
அனைத்தையும் கொண்டு இருக்கும்.
🌵தமிழர்கள்
தங்களது நிலத்தை ஐந்து வகையாக்
பிரித்து, அதை ஐந்திணைகள் என
அழைத்து அதில் ஒவ்வொரு வகையிலும்
வளரும் மரம், செடிகளை அறிந்து
வைத்து செயல்பட்டார்கள்.
🌵பல மரங்களை
அதன் பயன்பாட்டு முக்கியத்துவம் கருதி கடவுள் எனவும்
கூறிக் கூட வணங்கினார்கள்.
🌵இயற்கையை அறிந்து,
புரிந்து, இயற்கையோடு இணைந்து, இயற்கையையே கடவுளாக வணங்கும் நீண்ட
நெடிய பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் தமிழர்கள்.
🌵ஆனால் இன்று
இந்த மண்ணிற்கு எந்த வகையிலும் பொருத்தப்பாடு
இல்லாத ஒரு மரம், சீமைக்
கருவேல மரம் நமது தலையில்
திணிக்கப்பட்டு, தமிழகம் எங்கும் நீக்கமற
நிறைந்து உள்ளது.
நாட்டு
கருவேல மரத்தின் அழிவு:-
🌵"நாட்டு கருவேல (அ)
கருவேல மரம் மற்றும் வெள்வேலமரம்" வேலமரம்
என்று சொன்னால் இந்த இரண்டைத்தான் குறிக்கும்.
🌵ஆனால் இந்த
இரண்டின் மானத்தைக் கப்பலேற்றுவதற்காகவே வந்ததுதான் விஷ்முள்மரம் என்று சொல்லக்கூடிய வேலிமுள்மரம்.
சில இடங்களில் மட்டும் இதை அறியாமல்
வேலிக் கருவை என்பார்கள்.
🌵இது குறைந்த
பயனும் நிறையத் தீய குணங்களும்
கொண்ட பயனற்ற மரவகை ஆகும்.
🌵இது யாரும்
வைத்து வளர்க்காமலும் வளர்த்தும் இரண்டுவிதமாகப் பெருகி இப்போது அழிக்கமுடியாத
அளவு இடம் கிடைத்த பக்கமெல்லாம்
வனம்போல் வளர்கிறது.
🌵 குதிரையைப்போல் தோற்றமிருப்பதால் யாரும் கழுதையைக் குதிரை
சொல்வதில்லை.
🌵ஆனால் அப்படிப்பட்ட
ஒற்றுமைகூட இல்லாத நிலையில் படித்த
சில அறிவுஜீவிகளின் அறியாமையால் விஷமுள் மரத்தைக் கருவேலமரம்
என்று பெயரும்வைத்து அதை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பெரிய
பிரச்சாரமும் செய்துவிட்டார்கள்.
🌵அதற்கு முகநூலில்
கிடைத்த வரவேற்பு அளவே இல்லை. மறுப்புக்
குரல் ஈடுபடவே இல்லை!
🌵இனியாவது ஒருவிஷயத்தைச்
சரியாகப் புரிந்துகொண்டு ஆதரிக்க அல்லது மறுக்க
வேண்டும்.
🌵இல்லாவிட்டால் படித்தவர்களுக்கும்
பாமரர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
நாட்டு
கருவேல மரத்தை பற்றி முழுமையாக
பார்த்தோம்..
நாளை சீமை கருவேல மரத்தை
பற்றி பார்ப்போம்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment