Tuesday, 11 April 2017

தாவரத்தின் குரல் -- நன்மை தரும் கருவேலமரம் (பாகம்-4)



Image result for naatu karuvelam tree images


"என்னை அறிவீரா?? -- நன்மை தரும் கருவேலமரம்

நேற்று  கருவேல மரத்தின் பயன்பாடுகள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள்:-

🌵கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.

🌵 பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சசல் தணிக்கும், காச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல், மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும்.

🌵காமம் பெருக்கும், கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத துவளச்செய்யும், சளியகற்றும்.

🌵இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட விரைந்து ஆறும்.

🌵துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல் வெப்புக் கழிச்சில் பாஷண மருந்து வீறு ஆகியவை தீரும்.

🌵இலையை அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.

🌵இளம் வேர் 20 கிராம் நன்கு நசுக்கி 1 லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி 25 மி.லி. யாக காலை மாலை சாப்பிட்டடு வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை தீரும்.

🌵பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.

🌵கருவேலம்பட்டை, வதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சல், பல்வலி, பல்லாட்டம் ஆகியவை தீரும்.

🌵கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடித்து 2 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரத் தாது பலப்படும். இருமல் தீரும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

நாளை கருவேல மற்றும் நாட்டு கருவேல மரத்தின் அழிவை பற்றி பார்ப்போம்...

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment