"என்னை அறிவீரா?? -- நன்மை தரும் கருவேலமரம்
🌵*கருவேலமரம்* அல்லது கருவமரம் என்பது காடுகளில் வளரும் முள்மரம். (Acacia nilotica) இது ஆபிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்டது. கருவேலமரம் தமிழகத்தில் பயனுள்ள மற்றும் பாரம்பரியம் மிக்க மரங்களுக்கு ஒன்றாக கருதப்படுகிறது.
🌵கருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica). இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது.
பெயர் குழப்பங்கள்:-
🌵தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica), சீமையில் (வெளியில்,பெயர் காரணமும் அதுவே) இருந்து அறிமுகப் படுத்திய சீமை கருவேலமரத்தையும் (Prosopis juliflora) ஒத்து இருந்ததாலும் இந்த குழப்பம். ஆனால் அடிப்படையில் இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.
🌵ஆனால் அடிப்படையில் சீமை கருவேலமரமும் , கருவேலமரமும் வேறு வேறு மரங்களாகும். சீமை கருவேலம் மரமென்று நினைத்து வேலமரம் என்ற பாரம்பரிய கருவேலமரத்தை வெட்டிவிடக் கூடாது.
வளரியல்பு:-
🌵கருவேல் ஒரு கெட்டியான மரம். சுமார் 25 அடி முதல் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.
🌵 தமிழகம் எங்கும் தரிசு நிலங்களிலும், மலைகளிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கக் கூடியது. இதன் இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை யுடையது.
🌵 இலைகள் கால் அங்குல நீளத்தில் 10 - 12 இலைகளையுடையது, காய் சுமார் 6 அங்குல நீளமுடையது அதில் 8 -12 கொட்டைகள் இருக்கும்.
🌵இந்த மரத்தில் கிளைகளில் வெண்மையான முட்கள் இருக்கும்.. மரபட்டைகள் வெடித்தும் கருப்பாகவும் மரக்கலராகவும் இருக்கும்.
🌵மலர்கள் மஞ்சள் நிறமானவை அரை அங்குல விட்டமுடையவை. இவை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். காய்கள் வெண்ணிறமான பட்டை வடிவானவை. விதைகள் வட்ட வடிவமானவை. வெள்ளாடுகள் காய்களை விரும்பிச் சாப்பிடும்.
🌵நன்மை தரும் கருவேல மரம் இரு வகைப் படும். இதை பற்றி நாளைக்கு பார்ப்போம்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment