"என்னை
அறிவீரா?? -- தீமை செய்யும் சீமைக் கருவேலம்
நேற்று
தீமைகளை பார்த்தோம்.
சில கேள்வி பதில்கள் மற்றும்
இதில் உள்ள நன்மைகள்:-
1.விஷச்செடியா??
🌵இது விஷச்செடி
வகையை சார்ந்ததா என்றால் நிச்சயமாக இல்லை.
விஷச்செடி என்றால் அரளிச்செடியை சொல்லலாம்.
🌵இந்த முறையில்
பார்த்தால் இந்த மரத்தினால் உயிரினங்களுக்கு
அந்த மாதிரியான எந்த பாதிப்பும் இல்லை.
மேலும் இதன் முள் விஷத்தன்மை
வாய்ந்தது, இலையை தின்றால் உயிரிழப்பு
என்பதெல்லாம் முற்றிலும் ஆதாரமற்ற விசயங்களே.
2.வறட்சிக்குக் காரணமா?
🌵 சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இதுதான் முக்கிய காரணம் என்பது அபத்தமானது. வறட்சி என்பது ஒருவகையில் மட்டும் வருவது இல்லை.
பல காரணிகள் பின்நிற்கின்றன.
🌵மண்வளம், நிலத்தடி நீரின் அளவு, காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்ற காரணிகள். இந்த மரமே இதை சுற்றியுள்ள காலநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் சரியில்லை.
🌵நாம் அரசுக்கு
நீர் நிலைகளை பாதுகாக்க எந்த
ஒரு திட்டமும் செயலும் இல்லை.
அப்படியே இருந்தாலும் செயல்முறை படுத்த மாட்டார்கள்.. இப்படி
இருக்க இந்த மரத்தை குறை
கூறுவது தவறு.
3.உவர்நிலங்களில் மண்ணின் வளம் மேம்படுதல்
🌵இது வளர மண்வளம் தேவை இல்லை என்பதை பார்த்தோம். சாதாரண மரங்கள் வளர முடியாத மண்வளத்தில் அதாவது உப்பு,உவர்,மற்றும் அமிலத்தன்மை அதிகம் கொண்ட மண்ணில் இது செழித்து வளருவதோடு அந்த மண்ணின் தன்மையை மாற்றியமைக்கிறது.
🌵 அதாவது அதில் உள்ள கேடுகளை நீக்கி ஒருவகையில் மண்ணின் வளத்தை மேம்படசெய்கிறது.
🌵உவர்,உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் உள்ள அமிலத்த தன்மையை இந்த மரத்தை அதில் பயிரிடுவதன் மூலம் அந்த மண்ணை மேம்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியின்மூலமாக நிரூபித்து உள்ளார்கள்.
4.மண் அரிப்பை தடுக்குமா??
🌵ஆம் தடுக்கும்.
இம்மர சல்லி வேர்களை கொண்டவை.இதன் வேர்கள் நிலத்தில்
ஆழமாகவும் (53 மீட்டர்)
175 அடி நீளம் வரையிலும் மற்றும்
இவை உறுதியானப்
பக்கவேர்களையும் கொண்டவை.
🌵ஆனால் மண்
அரிப்பை தடுக்க இந்த மரத்தை
பயன்படுத்த வேண்டாம். தமிழர்களின் பாரம்பரியமான பனை
மரங்களை பயன்படுத்தலாம். இதுவும் மண் அரிப்பை
தடுக்கும்.
5.பருவ
மழையைத் தடுக்கிறதா? எப்படி?
🌵பிராண வாயுவை
வழங்கும் மரங்கள் மழையை ஈர்க்கின்றன.
ஆனால் இந்த மரம் கரியமில
வாயுவைத் தொடர்ந்து அளிக்கும் மரங்கள் மழையைத் தடுக்கின்றன.
6.இலையுதிர்
காலங்களில் தாவரத்தின் குணமானது இலைகளை உதிர்க்கும். ஆனால்,சீமைக் கருவேல மரத்தில்
இப்படி ஒரு சுழற்சி முறை
இல்லை? ஏன்?
🌵இம்மரம் காற்றில்
உள்ள ஈரப்பதத்தினை உறிஞ்சி வாழ்கின்றது. இதனால்
சுற்றமும் வறண்டு காணப்படும்.
🌵பொதுவாக மரங்கள்
கரியமிலவாயுவை உணவாக எடுத்துக் கொண்டு
பிராணவாயுவை சுற்றுச்சூழலுக்குக் கொடுக்கும்.
🌵 ஆனால் சீமைக்
கருவேலமரமானது கரியமில வாயுவை மட்டுமே
வெளியேற்றும் இதனால் சுற்றுப் பகுதிகள்
வெப்பமயமாகின்றன. உலக வெப்பமயமாதலுக்கு இதுவும்
ஒரு முக்கிய காரணமாகின்றன.
நாளை அழிக்கும் முறைகளை பற்றி பார்ப்போம்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment