"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்
நேற்று வேம்பு பயன்பாடுகள் பற்றி பார்த்தோம்.
வேப்பெண்ணெய்:-
🌳வேப்பெண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
🌳கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும்.
🌳உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர். அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும்.
🌳ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும் இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.
🌳வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது. நிலக்கடலை, பூண்டு ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது.
🌳இது பெரும்பாலும் டிரைகிளிசரைடுகள்,மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும்.
மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment