"என்னை
அறிவீரா?? -- தீமை செய்யும் சீமைக் கருவேலம்
நேற்று
சீமை கருவேல மரம் மற்றும்
மறு பெயர்களை பார்த்தோம்.
சீமை கருவேல மரம் பாகங்கள்:-
இலை , முட்கள், பட்டை, மொக்கு, காய்,
பூக்கள் மற்றும் விதைகள் உள்ளன.
தன்மை:-
🌵இம்மரம் 12 மீட்டர்
உயரம் வரை வளரக்கூடியது. இது
புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும்,
கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன.
🌵இம்மர சல்லி
வேர்கள் மழை நீரை பூமிக்குள்
செல்ல விடாமல் மேலேயே தேங்க
வைத்து விடுகிறது.
🌵இதன் வேர்,
நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்)
175 அடி நீளம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது.
🌵இவை ஆழ
வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை
மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை
தடைசெய்கிறது.
🌵எந்த ஒரு
தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளரும்
தன்மை கொண்டவை.
🌵எந்த வறட்சியிலும்
வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல
மரங்களுக்கு உண்டு.
🌵மழை
இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது
இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
🌵ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி காற்றில்
இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.
🌵எந்த நோயினாலும்
பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த
இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு
தான் மட்டும் செழித்துப் படருகின்ற
தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு.
🌵இவை வாழும்
இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை
அறவே தடுக்கிறது.
வரலாறு:-
🌵பயிர்களுக்கு வேலியாகவும்
சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில்
காங்கிரஸ் ஆட்சியின் போது ஆஸ்திரேலியாவில் இருந்து
சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
🌵இந்த அறுபது
ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம்
முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது.
🌵இந்த
முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த
நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத்
தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும்
வைக்கப்பட்டு வருகிறது.
இதன் தீமைகளை பற்றி
நாளை பார்ப்போம்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment