"என்னை
அறிவீரா?? -- அரச மரம்
🌳நமது பாரம்பரியமான
மரங்களைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு மற்றும் மருத்துவக் குணங்கள்
பற்றியும் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறோம்.
🌳அந்தவகையில்,
இன்று மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரச
மரம் பற்றிப் பார்ப்போம்.
🌳பண்டைய காலத்தில்
இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை
தெய்வமாக வழிபட்டனர்.
🌳இந்துக்களின் வழிபாட்டில்
வேம்பு, ஆல், அரசு என
பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து
மரங்களையும் விட அரசமரத்திற்கு தன்
சிறப்பு அதிகம்.
தன்மை:-
🌳அரசு என்பது
பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும்.
🌳சுமார் 30 மீட்டர்
உயரம் வரை வளரக்கூடிய இத்
தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3
மீட்டர் வரை வளரக்கூடியது.
🌳ஆனால் இதன்
பூர்வீகம் பாரத பூமிதான்.
🌳தமிழகம் எங்கும்
வளர்கின்றது. சிற்றரசு, பேரரசு, கொடியரசு, பூவரசு
இதன் வகைகளாகும்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment