"என்னை அறிவீரா?? -- பனை மரம்
வணக்கம்
நேற்று பனை ஓலை, குருத்து, பனை
கருக்கு , பனை ஈர்க்கு , பத்தல்
, மட்டை ,பனைவேர் மற்றும் முற்றிய
மரம் பற்றி பார்த்தோம்.
பனையிலிருந்து
பெறப்படும் பொருள்கள்
:-
🌴உணவுப்பொருள்களில் பதநீர் முதன்மையானது.
🌴இவற்றை மண்
கலயத்தின் உள் சுண்ணாம்பு பூசி
அவற்றில் வடியும்படி கட்டி வைப்பார்கள்.
🌴 இதுவே கருப்பட்டி,
வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ்
எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக
வடிவம் பெறுகிறது.
பனங்கருப்பட்டி
(அ) கருப்புக்கட்டி (அ) பனைவெல்லம்:-
🌴பதநீரை
காய்ச்சி பாகாக மாற்றி சிரட்டையில்(தேங்காய் ஓடு, மணற்பரப்பில் நிமிர்த்த
நிலையில் புதைத்து) ஊற்றி மறுநாள் லேசாக
தட்டினால் அழகாக தனியாக பனங்கருப்பட்டி
வந்து விடும்.
🌴அனைத்து ஊட்ட
சத்து(புரதம், சூக்ரோஸ், குளுகோஸ்,
தாதுஉப்புகள், தேவையான பி,சி
வைட்டமீன்கள், பொட்டாசியம், சுண்ணாம்பு,பாஸ்வரம்,இரும்பு, தையாமின – பி வைட்டமின், நிகோடினிக்,
சோடியம், நிக்கல், மக்னீசீயம்) நிறைந்தது. கரும்பு வெல்லத்தினை விட
அமினோ அமிலம் நிறைய உண்டு.
பனங்கற்கண்டு,
பனஞசீனி, பனங்கசண்டு:-
🌴பதநீரில் உள்ள
நீரை பக்குவமாக வெளியேற்றி படிகமாக வேண்டும். பதநீரை
108 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொதிக்க வைத்து மண்
பானைகளில் ஊற்றி பூமியில் புதைத்து
வைக்க வேண்டும் 2.3 மாதங்களில் படிகமாக மாறும் தற்பொழுது
படிகமாக்கும் இயந்திரம் மூலம் 30 நாட்களில் படிகங்களாக உருவாக்கலாம்.
🌴பெரிய படிகங்கள்
கற்கண்டு, சலித்து எடுப்பது சீனி
மிஞ்சும் கசண்டு கழிவு பாகு.
🌴பனந்தும்பு, தூரிகைகள்,
கழிகள், பனையோலையில் இருந்து விசிறி, வீடுகளை
கட்டவும், கூரையாகவும் மற்றும் அலங்காரப்
பொருள்களாக பயன்படுகிறது.
🌴விசிறி, தொப்பி,
குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள்
செய்யலாம்.
நாளைக்கு
மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment