Saturday 1 April 2017

தாவரத்தின் குரல் -- பனை மரம் (பாகம்-3)



Image result for palm tree images


"என்னை அறிவீரா?? -- பனை மரம்

வணக்கம் நேற்று பனைப் பால் மற்றும் நொங்கு(நுங்கு) பற்றி பார்த்தோம்.

பனைக்கிழங்கு:-

🌴 பனையில் இருந்து விழும் பனம் பழத்தின் விதை தான் பின்பு பனம் கிழங்காக வருகின்றது .

🌴பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும்வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்காக உருவாகின்றது.

🌴இதுவே பனங்கிழங்கு ஆகும்.

🌴ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது.

பனைப் பழம்:-

🌴பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும்.

 🌴இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும்.

 🌴தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும்.

🌴இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது.

🌴பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும்.

🌴இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠







No comments:

Post a Comment