Friday 28 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-6)


Image result for moringa tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் இலையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள் மற்றும் சத்துக்கள்:

பூக்கள்:-

🌳நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.

 🌳முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

🌳முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

🌳அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.

முருங்கைப் பிஞ்சு:-

🌳முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.  இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

🌳இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

விதை:-

🌳முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.

இலைக்காம்பு:-

🌳சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.

🌳முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.

🌳தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.

முருங்கைப் பட்டை:-

🌳முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

முருங்கை வேர்:-

🌳வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்,  இரைப்பு, முதுகுவலி நீங்கும்.

இதன் சில நோய்களுக்கு மருத்துவ பயன்களை பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment