Thursday 6 April 2017

தாவரத்தின் குரல் -- கருவேலம்


Image result for karuvelam bad tree imagesImage result for karuvelam good tree images


"என்னை அறிவீரா?? -- கருவேலம் 

அனைவருக்கும் வணக்கம்..இன்று நாம் பார்க்க போகிற மரம் நாம் முக்கியமாக  அறிய வேண்டிய மரம் மற்றும் குழப்பங்கள் நிறைந்த மரமும் கூட அதனால் இம் மரத்தினை பார்க்கும் முன் இதன்  முன்னுரை பார்க்கலாம்..

🌵 இரு வகையான மரங்கள் உள்ளது.
1. சீமைக் கருவேல மரம் () வேலிகாத்தான் மரம் () சாத்தான் மரம்

2. நாட்டுக் கருவேல மரம் () கருவேல மரம் () வேல மரம்

🌵இந்த இரு வகையான மரத்திற்கும் ஒரே பெயர்களில் முடிவடைவதாலும் மற்றும் இதன் இலைகள் ஒன்று போன்றே காணப்படுவதால் குழப்பம் துவங்குகிறது.

1. "சீமைக் கருவேல மரம்" () வேலிகாத்தான்

 🌵மண்ணுக்கே நஞ்சு! தண்ணியை மண்ணுக்குள் போக விடாத சல்லி வேர்கள் கொண்டது.
🌵வெளிநாட்டவர்களால் இறக்குமதி செய்யப்பட்டு, வேலி போடவும், அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தத் துவங்கி..
தமிழக மண்வளத்தையே நாசம் செய்த பயிர், இந்தச் சீமைக் கருவேல மரம்! கேரளத்தில், இதுக்குத் தடை!

2.நாட்டுக் கருவேல மரம் () கருவேல மரம் () வேல மரம்

🌵நாம் சொல்வது: நல்ல கருவேலம்= "நாட்டுக்" கருவேலம்!
ஆலும் "வேலும்" பல்லுக்குறுதி என்பார்களே, அந்த வேல மரம்!
🌵வேல மரம்= முட்கள் நிறைந்தது!

🌵வேலிகாத்தானும் முள்ளே  எனினும், நமது நாட்டுக் கருவேலம்= அதை விட, சற்று உயரம் குறைவே!
ஆணி வேர்கள் உடையது! வைரம் பாய்ந்த கருமை கொண்டது! செல்லரித்து உளுத்துப் போகாது!
🌵நம் வேல மரத்தின் பிஞ்சுக் கிளை/ குச்சிகளே= ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!
ஆடு போன்ற மேய்ச்சல் விலங்குகளுக்கும், இதன் இலை/தழைகள் மிகவும் பிடிக்கும்! பறவைகளும் வந்து அமரும்!

(வேலி காத்தானில், இதெல்லாம் கிடையாது! வேறெந்த உயிரையும் அண்டவிடாது, தானே உறிஞ்சிக் கொள்ளும்/ கொல்லும்!)

🌵ஆனால் அடிப்படையில் இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.
🌵ஆகவே இவ்விருமரங்களை (கருவமரம் , சீமை கருவேலமரம் )பற்றி வேறுபாடு அறியவேண்டியது கட்டாயம்.

வரும் நாட்களில் இதனை பற்றி முழுமையாக பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠


No comments:

Post a Comment