Saturday 8 April 2017

தாவரத்தின் குரல் -- தீமை செய்யும் சீமைக் கருவேலம் (பாகம்-5)


Image result for karuvelam bad tree images


"என்னை அறிவீரா?? -- தீமை செய்யும் சீமைக் கருவேலம்

நேற்று சில கேள்வி பதில்கள் மற்றும் இதில் உள்ள நன்மைகளை பார்த்தோம்.

அழிக்கும் முறை:-

கேரளா அணுகுமுறை:-

🌵அண்டை மாநிலமான கேரளாவில் இம்மரங்களைக் காண முடியாது. அம்மக்களும், அரசும் மிகவும்விழிப்புணர்வுடன் இருந்து தங்களது பகுதியினைப் பாதுகாத்து வருகிறார்கள்.

🌵சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான மாநிலமாக இருக்கிறது.  அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது.

*நாம் செய்ய வேண்டியது என்ன ? *

🌵 தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் தற் போது இந்த மரங்கள் வேலிகளைத் தாண்டி வயல்வெளிகளிலும் பரவிவிட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பு நிலத்தையாவது இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது.

இந்த மரங்களை அழிக்க

1. 🌵சீமைக் கருவேல மரம் ஒழிக்கப் பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு நடைமுறைபடுத்த தமிழக அரசுக்கு எல்லா வகையிலும் நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.

2.🌵 ஊராட்சி மன்றங்களின் கிராமசபையிலும் சீமைக் கருவேலமரம் ஒழிக்கப்பட வேண்டும் என நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்இது பற்றி தொடர்ந்து அரசு அதிகாரிகளின் கவனத்திறக்கு எடுத்துச் சென்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. 🌵வாய்ப்புள்ள தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகள், தங்கள் அமைப்பு மூலம் இதை செய்யலாம். ஜே சி பி, பொக்லைன், இட்டாட்சி போன்ற இயந்திரங்கள் மூலம் இந்த மரங்களின் பக்கவாட்டு வேர், தூர் வேர்களை பறித்து எறிய வேண்டும். வேரின் தூரில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட வேண்டும். மற்ற மரங்களில் தீவைத்து எரித்தால் வளராது. அதனால் இந்த மரங்களை அதிக கவனத்துடன்  அதிக வெப்ப நிலையில் எரிக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் சிறிதளவு மழை பெய்தாலும் இந்த மரங்களின் வேர் துளிர்த்து வந்துவிடும்.

4. 🌵செப்டம்பர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் இந்த சீமை கருவேல மரங்கள் அழிப்பு தொடர்பான இயக்கம் வீறுகொண்டு எழுந்தால் மட்டுமே குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான இந்த மரங்களை எடுக்க முடியும்.

காரணம்:-

(1) 🌵இது உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டவை. இதனை வெயில் காலங்களில் வேரோடு அழிப்பது மிகவும் கடினம்.

(2) 🌵ஆனால் மழை காலங்களில் எளிதாக வேரோடு பிடுங்கிடலாம்.

5.🌵ஒரு இடத்தில் வேரோடு எடுக்கப் படும் மரத்தை இரண்டு மாதம் கழித்து மீண்டும் அந்த இடத்தில் மரம் வளர்ந்து உள்ளதா என்று ஆய்வு செய்து சிறியதாக இருக்கும் போது அழிப்பது நல்லது.

🌵இதை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு செய்ய வேண்டும்.அப்போது தான் முழுமையாக அழிக்க முடியும். இல்லையென்றால் வளர்த்து பெருகிவிடும்.

6. 🌵கேரளா போல பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடேயும் சீமைக் கருவேல மர ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

7.🌵 நமது மண்ணின் மரமான நாட்டு கருவேல மரம்- அந்நிய மரமான சீமைக் கருவேல மரம் இவை பற்றிய வேறுபாட்டை அனைத்து மக்களும் உணர வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

8. 🌵ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் சீமைக் கருவேல மர ஒழிப்பை பற்றி மதுவின் பாதிப்பு போல் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

9. 🌵மக்களிடையே சீமைக் கருவேல மர ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சுவரெழுத்து, துண்டறிக்கை, சுவரொட்டி, திரையரங்க விளம்பரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், காட்சி ஊடக விளம்பரங்களை அரசு விரைந்து விரிவாக செய்ய வேண்டும்.

10. 🌵சீமைக் கருவேல மரத்தை பார்த்தாலே 
-நமது மிகப் பெரிய எதிரியை பார்ப்பது போல் 
- கதைகளில் வரும் ராட்சசனை பார்ப்பது போல் 
- தண்ணீரை உறிஞ்சும் ராட்சச ஆழ்குழாய் கிணறு போல 
- இயற்க்கை, விவசாயம், நீர்நிலை, மண், காற்றை, உயிரினத்தை வேரடி மண்ணாக அழிக்கும் எமனாக பார்க்கும் வகையில் 
-அனைத்து வளங்களையும் அழிப்பதாக பார்க்கும் வகையில் மன நிலையை சமூகத்தில் உருவாக வேண்டும்.

11. 🌵வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை விட "ஒவ்வொருவரும் ஒரு சீமைக் கருவேலம் மரம் அழிப்போம்" என்ற முழக்கத்தை முன் எடுக்க வேண்டும்.

12. 🌵காலிமனை, விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களை பொதுமக்களே பறித்தெறிய வேண்டும். மக்களிடையே சீமைக் கருவேல மர ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

13. 🌵போலியோ ஒழிப்பு என்பதை நாடு முழுக்க நடத்தியது போல், நாடு முழுக்க இயக்கமாக "சீமைக் கருவேல மரம் ஒழிப்பு" நடத்த வேண்டும்.

🌵நம் நிலத்தை அழிக்கும் சீமைக் கருவேல மரத்தினை வேரறுப்போம்...
🌵மண்ணை, நீரை, காற்றை, இயற்கையை, பறவை, விலங்கு, மனிதனை பாதுகாப்போம்...
நாளை தைலம் (மரம்) எனப்படும் யூக்கலிப்டஸ் மரத்தை பற்றி பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠


No comments:

Post a Comment