Friday 7 April 2017

தாவரத்தின் குரல் -- தீமை செய்யும் சீமைக் கருவேலம் (பாகம்-3)


Related image




"என்னை அறிவீரா?? -- தீமை செய்யும் சீமைக் கருவேலம்

நேற்று இதன் பாகங்கள், தன்மைகள் மற்றும் வரலாறு பார்த்தோம்.

சீமை கருவேலம் மரத்தின் தீமைகள்:-

🌵விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.

🌵அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியதுநஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.

🌵புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு.

🌵இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன

🌵இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.

🌵பொதுவாக மரங்கள் கரியமிலவாயுவை உணவாக எடுத்துக் கொண்டு பிராணவாயுவை சுற்றுச்சூழலுக்குக் கொடுக்கும். ஆனால் சீமைக் கருவேலமரமானது கரியமில வாயுவை மட்டுமே வெளியேற்றும் இதனால் சுற்றுப் பகுதிகள் வெப்பமயமாகின்றன. உலக வெப்பமயமாதலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகின்றன.

🌵இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ முடியாத நிலை இருக்கிறது.

🌵இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீளம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது.

🌵இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது.

🌵ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.

 🌵மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

🌵இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் கால்நடை, மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

🌵சீமைக் கருவேலமர விறகு எரிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்
இம்மரங்களை எரிப்பதால் வெளியேறும் கரியமில வாயுவிலிருந்து நிக்கோடின் என்னும் நச்சுப் புகை உருவாகி சுற்றுப்புறத்தை / காற்று மண்டலத்தை அபாயமாக்குகிறது. உதாரணமாக: ஒரு துண்டு விறகை எரிப்பதால் 14 சிகரெட் புகையிலிருந்து வெளிவரும் நிக்கோடினை சுவாசிப்பதற்குச் சமமாகிறது. இதனால் தான் அப்பகுதியில் இருக்கும் மக்கள் அதிக எண்ணிக்கையில் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். மேலும் இப்புகையினால் கருக்கலைப்பும் அதிக அளவில் ஏற்படுகின்றது.

🌵ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்இந்த நச்சு மரத்திலிருந்து வெளிவரும் வெப்பம் உயிரினங்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதுஇவை கிராம மக்களுக்கு விறகாக, கரியாக பயன் பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதால் இன்னும் அப்படியே வளர்கிறது.

 🌵இந்த முள் மர விதைகள் எத்தகைய பூச்சிகளுக்கும் இரையாகாமல், 10 ஆண்டு காலத்திற்கு பின்னும் முளைக்கும் வீரியம் கொண்டவை

🌵 இம்மர சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் மேலேயே தேங்க வைத்து விடுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி, வேளாண்மை தொழிலுக்கு தீமை விளைவிக்கும்இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.

🌵 முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.

🌵இம்மரங்களில் பறவைகள் அமர்வதில்லை. கூர்மை மிக்க அடர்த்தியான முட்கள் இருப்பதால், எந்த பறவைகளாலும் இம்மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்ய முடிவதில்லை.

நாளை இதனால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்...

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠







No comments:

Post a Comment