Thursday 6 April 2017

தாவரத்தின் குரல் -- பனை மரம் (பாகம்-7)



Image result for palm tree images



"என்னை அறிவீரா??  --  பனை மரம் 

நேற்று  மருத்துவப் பயன்கள், தலவிருட்சம் மற்றும் உயிர் வாழ்வாதாரம் பற்றி பார்த்தோம்.

கள் () பனங்கள்ளு:-

🌴பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் குருத்து என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர்.

🌴அவ்வாறு செய்யும்பொழுது சுரந்த 6 மணி நேரத்திற்கு பின்பு தானாகவே நொதித்து ஆல்கஹால் உற்பத்தியாகும்(நேரம் செல்ல செல்ல 5 சதவீதம் வரை உயரும்). பதநீர் புளிக்கும் பொழுது ஈஸ்ட் என்ற பூசனம் உருவாகிறது அவற்றின் உதவியால் ஆல்கஹால்).

🌴 மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.

🌴 அளவோடு பருகினால் ஆரோக்கியம் உண்டு மற்றும் பதநீரில் உள்ள அனைத்து சத்துக்களும் இவற்றில் உண்டு மேலும் விட்டமீன் பி 6, 12 நிறைய உண்டு.

🌴பனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும்.

🌴இவை தற்பொழுது தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட பானம் ஆனால் அன்டை மாநிலங்களில் இன்றளவும் உள்ளது.

கள்ளு தடை:-

🌴உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது.

🌴ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன.

🌴மதுவென்பது சங்ககாலம் முதல் தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாததாக இருந்தாலும்  இலைமறை காயாகத்தான் இருந்தது.

🌴பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்டஈழப் பூச்சி வரி, குடிக்குரியதுதான்.

🌴பனைத் தொழிலுக்கென 1968-ல் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு பனை வெல்லலம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம். கதர் வாரியத்தின் கீழ் செயல்பட்ட இந்த அமைப்புக்கு மும்பை கதர் ஆணைக் குழு மூலதனக் கடன் வழங்கிவந்தது. இது தவிர, மாவட்ட அளவில் 8 சம்மேளனங்கள், 1,511 கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3.5 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.

🌴ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகளின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாமல் போனதாலும் கூட்டுறவு நிறுவனங்களுக்கே உரிய சீர்கேடுகளாலும் இணையம் சீரழிந்தது. இந்நிலையில், 1996-ல் மூலதனக் கடன் வழங்குவதை நிறுத்தியது மும்பை கதர் ஆணைக் குழு. பல இடங்களில் விற்பனையகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன.  

🌴இதனால் பனை மரம் தொழில் பாதிக்கப் பட்டது.

🌴இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் இன்னிக்கு பனை மரம் மட்டும் இல்லாமல், அந்த மரம் ஏறும் ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க.

🌴 நிலைமை இப்படியே தொடர்ந்தால், நாளை பனை மரத்தைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்!''

🌴நாம் வெள்ளை சக்கரை  பயன்படுத்துவதை குறைத்து கொண்டு பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு பயன்படுத்துவதை அதிகரிக்கலாம்.

"திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்"

 -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி பனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும்.

🌴தமிழர்களின் சொத்தான பனைமரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை நாம் மேற்கொள்ளவேண்டும்.

🌴பனை மரம் தமிழர்களின் அடையாளம்.💪
நன்றி
🌴பனை மரத்தை பற்றி முழுமையாக பார்த்தோம்...
நாளை 🌴 பூவரசம் மரத்தை பற்றி பார்ப்போம்.

எழுத்து

#.முகேஷ்..⁠⁠⁠⁠

No comments:

Post a Comment