Wednesday 5 April 2017

தாவரத்தின் குரல் -- பனை மரம் (பாகம்-6)


Related image


"என்னை அறிவீரா?? -- பனை மரம் 

வணக்கம் நேற்று பனையிலிருந்து பெறப்படும்  பொருள்களை பற்றி பார்த்தோம்.

மருத்துவப் பயன்கள்:-

🌴ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப்போனால் தண்ணீர் கூட விடாமல், சத்தான எருவும் போடாமல் இயற்கையில் தானாக வளரும்.

🌴பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை கொப்பளங்கள் நீங்கும.

🌴 தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

🌴 பனங்கற்கண்டை சாப்பிட்டு வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

🌴பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும்.

🌴இன்னும் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது...

 தலவிருட்சம் :-

🌴தமிழ்நாட்டில் பல திருத்தலங்களில்  இறைவனோடு  சேர்த்து பனை மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது

🌴குலத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் பெண் தெய்வநாயகி பத்திரகாளியின் அம்சமாக பனை மரத்தை வணங்கி வருகிறார்கள்

உயிர் வாழ்வாதாரம் :-

🌴காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால், பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனை மரங்களே விளங்குகின்றன

🌴வெளவால்கள், சிறு குருவிகள், வானம்பாடி, பருந்து, ஆந்தை, தூக்கனாங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி, பனங்காடைகள், மைனாக்கள் போன்ற பறவைகளும், அணில், எலி போன்ற சிறு விலங்குகளும் தேள், பூரான், வண்டு போன்ற பூச்சி இனங்களும் வாழ்கின்றன.

🌴அதன் தண்டுப்பகுதியில் பல்லி , உடும்பு, ஓணான், பாம்பு போன்றவையும் முயல், மரநாய், பனங்காட்டு நரி, ஓநாய் என பல விலங்குகள் அதன் தோப்புகளில் வாழக்கூடியன.
🌴வெளவால்கள் ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான கொசுக்களையும் ஈக்களையும் தின்று வாழ்பவை. இதுபோல ஒவ்வொரு உயிர்களும் இயற்கை சமநிலையில் நமக்கு நன்மை செய்யும் காரணிகளே!

எழுத்து
#.முகேஷ்*⁠⁠⁠⁠

No comments:

Post a Comment