Thursday 13 April 2017

தாவரத்தின் குரல் -- பூவரசம் (பாகம்-1)




Image result for poovarasu tree images

"என்னை அறிவீரா?? -- பூவரசம் () பூவரசு

🌳பூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது

🌳பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.

🌳பூவரசு மரத்திற்கு கல்லால் பூப்பருத்தி, புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்றும் குறிப்பதுண்டு.

🌳காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.

🌳சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர்பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

 🌳இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும்.

🌳குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பெரும்பரப்பில்  அதிகமாகக் காணப்படுகிறது.

 🌳இம்மரம் இந்தியாவின் வெப்பப் பகுதிகளிலும் கடற்கரையோரங்களிலும் அந்தமான் தீவுகளிலும் பெரும் எண்ணிக்கையில் காணலாம்.

 🌳கிராமங்களில் வீடுகளில் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதை நாம் காணலாம்.  

🌳அடர்த்தியாகக் கிளைத்து விரைவில் வளரும். இம் மரம்  18 மீ உயரமும் 1.2 மீ பருமனும் வளரக்கூடியது.
 
🌳பொதுவாக பூவரசம் மரம் நான்கு வகைப்படுமஇதில் வருடம் முழுவதும் பூத்துக் காய்க்கும் மரம்தான் நாட்டுப் பூவரசு.

🌳இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை

நாளை இதன் பாகங்கள் பார்க்கலாம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment