Sunday 9 April 2017

தாவரத்தின் குரல் -- நன்மை தரும் கருவேலமரம் (பாகம்-2)


Related image


"என்னை அறிவீரா?? -- நன்மை தரும் கருவேலமரம்

நேற்று மரம், பெயர் குழப்பங்கள் மற்றும்     வளரியல்பு பற்றி பார்த்தோம்.

🌵இரு வகையான மரங்கள் காணப்படுகிறது..

ஒன்று கருவேல மரம்:-

🌵இதனை நாட்டுக் கருவேல மரம் () கருவேல மரம் () வேல மரம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

🌵நாம் சொல்வது: நல்ல கருவேலம்= "நாட்டுக்" கருவேலம்!
ஆலும் "வேலும்" பல்லுக்குறுதி என்பார்களே, அந்த வேல மரம்!

🌵வேல மரம்= முட்கள் நிறைந்தது!

🌵சீமை கருவேல முள்ளே  எனினும், நமது நாட்டுக் கருவேலம்= அதை விட, சற்று உயரம் குறைவே!
ஆணி வேர்கள் உடையது! வைரம் பாய்ந்த கருமை கொண்டது! செல்லரித்து உளுத்துப் போகாது!

🌵நம் வேல மரத்தின் பிஞ்சுக் கிளை/ குச்சிகளே= ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!

ஆடு போன்ற மேய்ச்சல் விலங்குகளுக்கும், இதன் இலை/தழைகள் மிகவும் பிடிக்கும். பறவைகளும் வந்து அமரும்.

(சீமை கருவேல மரத்தில் இதெல்லாம் கிடையாது! வேறெந்த உயிரையும் அண்டவிடாது, தானே உறிஞ்சிக் கொள்ளும்/ கொல்லும்!)

🌵இதன் நிறம் கருமையாகவும் உறுதியாகவும் கிளைகள் வாட்டசாட்டமாகவும் முட்கள் நீளமாகவும் இருக்கும்

🌵இது தமிழ்நாட்டு விவசாயிகளின் இணைபிரியாத பாரம்பரிய மரம்

🌵விவசாயக் கருவிகள் அனைத்தும் இதைக்கொண்டுதான் செய்தார்கள்.

🌵இந்தமரம் இல்லாத ஒரு விவசாயத்தைப் பற்றி முன்னர் நினைத்தே பார்த்திருக்க முடியாது! அவ்வளவு அவசியமான மரமாகும்.

இரண்டாவது வெள்வேலமரம்:-

🌵இதன் நிறம் வெண்மை கலந்த மஞ்சள் நிறமாகவும் கிளைகள் குட்டையாகவும் நெருக்கமாகவும் முட்கள் குட்டையாகவும் இருக்கும்

🌵இதன் பயன்கள் கருவேலமரம் அளவு இல்லாவிட்டாலும் இதுவும் தமிழ்நாட்டு விவசாயிகளின் பாரம்பரிய மரம் ஆகும்.

🌵இந்த மரத்தின் மையப்பகுதி சாமான்கள் செய்யவும் பட்டைகள் சாராயம் காய்ச்சவும் பயன்படும்.

🌵இலையும் காய்களும் வெள்ளாடுகளுக்கு நல்ல உணவாகும்

நாளை கருவேல மரத்தின் பயன்பாடுகள் பற்றி பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠








No comments:

Post a Comment