"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்
நேற்று மரத்தின் மருத்துவ குறிப்புகள் பற்றி பார்த்தோம்.
முருங்கைமரம் பட்டுப்போவது:-
🐞தேயிலை கொசு சாறு உறிஞ்சும் பூச்சி.
🐞இது முருங்கை, தேயிலை, கொட்டைமுந்திரி, கோ கோ, கொய்யா மற்றும் வேப்பமரங்களில் அதிக அளவில் தாக்குகிறது.குறிப்பாக முருங்கையில் இதன் தாக்கம் அதிகம்.
🐞நாவாய்பூச்சி இனத்தை சார்ந்தது. உருவத்தில் கொசுவைப் போன்று உள்ளதாலும், தேயிலை செடியில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் தேயிலை கொசு என அழைக்கப்படுகிறது.
🐞உடல் கருப்பு நிறத்திலும், முதுகு சிகப்பு மற்றும் வயிற்று பகுதி வெள்ளை நிற பட்டையாக காணப்படும்.
🐞மேலும் முதுகு புறத்தில் மிக நுண்ணிய குண்டு ஊசியை அடித்ததுபோல் இருக்கும்.
🐞இளம் மற்றும் முதிர்ச்சி அடைந்த தேயிலை கொசுவானது, அதனுடைய ஊசி போன்ற வாய் பகுதியிலிருந்து முருங்கையின் இளம் தளிர்கள், மொட்டுகள் மற்றும் குறுத்துகளில் சாற்றினை உறிஞ்சுகிறது.
🐞மேலும் ஒரு வித நச்சு திரவத்தையும் சுரப்பதால், குருத்துக்கள் முற்றிலும் வாடிவிடுகிறது.
தடுக்கும் முறை:-
🐞ஒரு லிட்டர் நீரில் வேப்பஎண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பம்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்து தாக்குதலை குறைக்கலாம்.
கம்பளிப் புழுக்கள்:-
🐛புதுத் துளிர் விடும்போதுதான் கம்பளிப் புழுக்களின் தாக்குதல் ஏற்படும்.
🐛இவை, இரவு நேரத்தில் மரங்களில் உள்ள இலைகளைத் தின்னும். காலையில் வெயில் பட்டவுடன் அடிமரத்தில் வந்து கூட்டமாக சேர்ந்துவிடும்.
🐛 இந்த நேரத்தில் அவற்றைச் சேகரித்து, தீயிட்டு அழித்துவிடலாம். மண்ணெண்ணெய் அல்லது துணிசோப்புக் கரைசலை அவற்றின் மீது ஊற்றினால் இறந்து விடும்.
🐛நான்கு பங்கு சாம்பலுடன் ஒரு பங்கு மிளகாய்த் தூள் கலந்தும் தூவி விடலாம். பூண்டு, இஞ்சி, மிளகாய்க் கரைசல் தெளித்தும் இதைக் கட்டுப்படுத்தலாம்.
தேவைப்படும் பொருட்கள்:-
🐛ஒரு கிலோ பூண்டு, அரைகிலோ இஞ்சி, அரைகிலோ பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை தனித்தனியாக அரைத்து, 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலைவேளையில் பயிருக்குத் தெளிக்கலாம்.
🐛பூண்டில் ‘அலிசின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
🐛பூஞ்சணங்களை வளர விடாது பயிருக்கு சத்துப்பொருளாகவும் பயன்படும். இஞ்சி, மிளகாய் தாவரப் பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.
கம்பளிப் பூச்சி கடித்தல்:-
🐛கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்க்க அரிப்பு குறையும்.
🐛முருங்கை இலையை அரைத்து பற்றுப்போட கம்பளிப் பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு குறையும்.
🐛 வெற்றிலையை சாறு வரும்படி அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.
பழமொழி அதன் அர்த்தம்:-
🌳முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்....!!!
ஏன் சொல்கிறார்களென தெரியுமா???
🌳இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.
🌳ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ந்தால் அவருக்கு பூ,இலை,காய்,பிசின்,பட்டை என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.
🌳முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை.
🌳இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.
இதைத் தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்"
என்று சொல்லி வைத்தார்கள்.
🌳ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா???
நாளை புளிய மரத்தை பற்றி பார்ப்போம்.
மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்
எழுத்து
#த.முகேஷ்