Wednesday, 3 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-3)



Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் தன்மைகள் பற்றி பார்த்தோம்.

பாகங்கள்:-

🌿புளியமரத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, விதை, பருப்பு முதலியவை.

இலை:-

🌿புளிய மரம் இலைகள் மிக சிறியது.
பார்ப்பதற்கு நாட்டு கருவேல, சீமை கருவேல மற்றும் நெல்லி மரத்தின் இலைகள் போன்று காணப்படும்.

🌿புளிய இலை வெப்பத்தன்மை கொண்டது. இலையும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

பூக்கள்:-

🌿சிவப்பு மற்றும் மஞ்சள் நீளமுள்ள மலர்கள் கொண்டவை.

🌿 மலர்கள் 2.5 செ.மீ அகலம் (ஒரு அங்குல) ஆரஞ்சு அல்லது சிவப்பு கோடுகள் கொண்ட மஞ்சள் நிறத்தில் உள்ளன.

புளிய பழம்:-

🌿ஆறு சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது… இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான்.

🌿 அதில், புளிப்புச் சுவைக்காக உணவில் நாம் பயன்படுத்தும் விளைபொருள் புளி. அன்றாட உணவுகளில் சுவை  கூட்டுவதில்  புளிக்கு முக்கிய இடமுண்டு.

🌿புளியம்பழம்  3-8 அங்குல வளைந்த மேல் ஓட்டுக்களில் அடங்கியிருக்கும்.

🌿ஒரு ஓட்டில் (Pods) ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை விதையை மூடிய விழுதாக பழங்கள் இருக்கும்.

🌿புளிப்பும் இனிப்பு கலந்த பழங்கள், அமிலமும் சர்க்கரையும் சேர்ந்தவை. நன்றாக பழுத்தவுடன் மேலோடுகள் உடையும் நிலையில் இருக்கும். சுலபமாக மேலோட்டை உடைக்கலாம்.

🌿புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும்.

"பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய்"

 என்பது தமிழர் வழக்கம்.

🌿அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும்.
வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழவிளைச்சல் அதிகமாக இருக்கும்.

🌿புளியில் கால்சியம், வைட்டமின் 'பி' நிறைந்துள்ளது. இது தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு.

விதை:-

🌿தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும்.

🌿விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன.

🌿 பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன.

🌿வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின், நியாசின், கால்சியம், இரும்பு,  பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

🌿புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.

புளிய மரத்தின் பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment