Wednesday, 3 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-4)



Image result for tamarind tree images

"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பாகங்கள் பற்றி பார்த்தோம்.

பயன்கள்:-

புளிய மரம்:-

🌿புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் (Furniture) தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது.

🌿 மரவேலை செய்யக் கடினமானது. சக்கரம், கொட்டாப்புளி, உலக்கை, செக்கு, உரல், கரும்பலகை முதலியவற்றைச் செய்ய இது பயன்படுகிறது.

🌿எரிதிறன் 4909 கிலோ கலோரி ஆகும். புளியமரத்தைப் பிளந்து விறகாக எரிக்கலாம். துப்பாக்கிக்கு உரிய வெடிமருந்துத் தயாரிப்பில் சிகிகரி பயனாகிறது.

🌿மரப்பட்டையில் 7% மடனின் உள்ளது. பட்டையிலிருந்து கோந்து வடியும், புளியமரத்தைக் காற்றுத் தடைக்காக வளர்க்கலாம். இதனை வளர்த்தால் மண் அரிப்பு உண்டாகாது.

இலைகள்:-

🌿புளியம் இலையைக் கொண்டு பட்டுத்துணிகளுக்குப் பச்சை நிறச் சாயம் தோய்க்கலாம். புளியம் இலையுடன் அவுரி செடி நீலத்தைச் சேர்த்தால் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் கிடைக்கும்.

🌿பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது.

புளிய பழம்:-

🌿புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும்.

🌿 வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.

விதை (புளிய கொட்டை):-

🌿புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம்.

🌿புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும்.

🌿புளி விதைப் பொடியைத் துணித்தொழிற்சாலையில் பயன்படுத்துவர். ஜாம், ஜெல்லி, மார்மலேட் முதலியவற்றிற்குரிய ஜெல்லோஸ் தயாரிக்க இது உதவுகிறது.

🌿புளிக்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு துணிக்கு மெருகூட்டவும். சணல் நூல் தயாரிப்பிலும் செயற்கை இழைகள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

🌿 புளியங்கொட்டை தோலிலிருந்து 'டானின்' எடுக்கப்பட்டு தோல் பதனிடல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

புளிய மரத்தின் மருத்துவ பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment