Friday 5 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-7)



Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

 *****************பேய் இருக்க!! இல்லையா!!!*************

நேற்று புளிய மரத்தின் பாகங்களில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்த்தோம்.

புளிய மரத்தில் பேய் இருக்க!!!:-

"இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்க கூடாது, பேய் வந்து அடித்துவிடும் என்று கூறுவர்"

👻பேய் என்ற ஒன்று இல்லை என்று தைரியமாக கூறுவோறும் இரவில் ஆளில்லா தெருவில் இருக்கும் புளிய மரத்தை கண்டால் பயம் கொள்வது இயற்கையே.

👻 புளிய மரங்கள் பகலில் தூய்மையான காற்றையும் O2 இரவு நேரங்களில் மோனோ  கார்பன்டையாக்சைடையும் CO2 வெளியேற்றும்.

👻இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்கினால் மூச்சடைப்பு ஏற்படும். யாரோ மேலேயிருந்து அழுத்துவது போல இருக்கும்.

👻 இது போன்ற விஞ்ஞான விளக்கத்தை கூறினால் யாரேனும் நம்புவார்களா? நாம் தான் பகுத்தறிவாளர்களாயிற்றே??

👻கடவுளை ஏற்க்கமாட்டோம் ஆனால் பேய்களை நம்புவோமே. அதனால் தான் நாம் முன்னோர்கள் இரவில் பேய்கள் வாசம் செய்கிறது என்று புரளியை கிளப்பிவிட்டனர்.

👻ஆடு, மாடுகள், குதிரை இவற்றை இம்மரத்தின் கீழ் கட்டக் கூடாது.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Thursday 4 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-6)


Image result for tamarind tree images

"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பயன்கள் பற்றி பார்த்தோம்.

பாகங்களில் உள்ள மருத்துவ பயன்கள்:-

இலை:-

💊இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது.
புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

💊வீக்கம் கரையப் புளிய இலையை வதக்கிச் சூடு பொறுக்குமளவில் ஒற்றடம் கொடுத்த பின் கட்டுவதுண்டு.

💊 புளியம் இலை, வேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி அந்நீரைக் கொண்டு புண்களைக் கழுவ ஆறாதப் புண்கள் விரைவில் குணமாகும்.

💊புளி இலை இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

💊புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம்.

💊புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

💊புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது.

புளிய பழம்:-

💊புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.
புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.

💊புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.

💊புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.

💊மது‬ அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.

புளிய மரத்தின் தீமைகள் பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-5)


Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பயன்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள்:-

"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்"

💊என்றொரு பழமொழி சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம் வேறு.

💊ஆ-நெய் என்றால் பசு நெய், பூ-நெய் என்றால் தேன். 40 வயதுக்குள் பசுநெய் சாப்பிட வேண்டும்... அதற்கு மேல் தேன் சாப்பிட வேண்டும்.

💊 ஆகவேதான் ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்றார்கள்.

💊 பசுநெய் போலவே புளியையும் 40 வயதுக்குள் இளமைத் துடிப்போடு இருக்கும் காலகட்டத்தில்தான் சாப்பிட வேண்டும்.

💊இள வயதினருக்கு புளி அவசியம் தேவை. சரியான அளவில் புளியை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மை வீறு கொண்டிருக்கும்.

💊 இப்படியாக பல நன்மைகள் புளியில் இருந்தாலும், அதை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தவில்லை என்றால் நேரெதிர் தீங்குகளுக்கு ஆளாக நேரிடும்.

💊புளி என்பது அமிலத்தன்மை உடையது என்பதால் ரத்தத்தில் உள்ள அமில காரத்தன்மையை சமநிலைப்படுத்த வேண்டி காரத்தன்மையுடைய தண்ணீர் நிறைய குடிக்க வேண்டி வரும்.

💊இதன் காரணமாகத்தான் புளியோதரை, பிரியாணி ஆகியவற்றை சாப்பிடும்போது தண்ணீர் நிறைய குடிக்கிறோம்.

💊 அப்படி தண்ணீர் குடிக்காமல் விடும்போது உடலில் உள்ள நீர் உறிஞ்சப் பட்டு மலச்சிக்கல் ஏற்படும். இது நாளடைவில் மூலத்தை ஏற்படுத்தவும் கூடும்.

புளிய மரத்தின் பாகங்களில் உள்ள மருத்துவ பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Wednesday 3 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-4)



Image result for tamarind tree images

"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பாகங்கள் பற்றி பார்த்தோம்.

பயன்கள்:-

புளிய மரம்:-

🌿புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் (Furniture) தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது.

🌿 மரவேலை செய்யக் கடினமானது. சக்கரம், கொட்டாப்புளி, உலக்கை, செக்கு, உரல், கரும்பலகை முதலியவற்றைச் செய்ய இது பயன்படுகிறது.

🌿எரிதிறன் 4909 கிலோ கலோரி ஆகும். புளியமரத்தைப் பிளந்து விறகாக எரிக்கலாம். துப்பாக்கிக்கு உரிய வெடிமருந்துத் தயாரிப்பில் சிகிகரி பயனாகிறது.

🌿மரப்பட்டையில் 7% மடனின் உள்ளது. பட்டையிலிருந்து கோந்து வடியும், புளியமரத்தைக் காற்றுத் தடைக்காக வளர்க்கலாம். இதனை வளர்த்தால் மண் அரிப்பு உண்டாகாது.

இலைகள்:-

🌿புளியம் இலையைக் கொண்டு பட்டுத்துணிகளுக்குப் பச்சை நிறச் சாயம் தோய்க்கலாம். புளியம் இலையுடன் அவுரி செடி நீலத்தைச் சேர்த்தால் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் கிடைக்கும்.

🌿பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது.

புளிய பழம்:-

🌿புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும்.

🌿 வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.

விதை (புளிய கொட்டை):-

🌿புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம்.

🌿புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும்.

🌿புளி விதைப் பொடியைத் துணித்தொழிற்சாலையில் பயன்படுத்துவர். ஜாம், ஜெல்லி, மார்மலேட் முதலியவற்றிற்குரிய ஜெல்லோஸ் தயாரிக்க இது உதவுகிறது.

🌿புளிக்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு துணிக்கு மெருகூட்டவும். சணல் நூல் தயாரிப்பிலும் செயற்கை இழைகள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

🌿 புளியங்கொட்டை தோலிலிருந்து 'டானின்' எடுக்கப்பட்டு தோல் பதனிடல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

புளிய மரத்தின் மருத்துவ பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-3)



Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் தன்மைகள் பற்றி பார்த்தோம்.

பாகங்கள்:-

🌿புளியமரத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, விதை, பருப்பு முதலியவை.

இலை:-

🌿புளிய மரம் இலைகள் மிக சிறியது.
பார்ப்பதற்கு நாட்டு கருவேல, சீமை கருவேல மற்றும் நெல்லி மரத்தின் இலைகள் போன்று காணப்படும்.

🌿புளிய இலை வெப்பத்தன்மை கொண்டது. இலையும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

பூக்கள்:-

🌿சிவப்பு மற்றும் மஞ்சள் நீளமுள்ள மலர்கள் கொண்டவை.

🌿 மலர்கள் 2.5 செ.மீ அகலம் (ஒரு அங்குல) ஆரஞ்சு அல்லது சிவப்பு கோடுகள் கொண்ட மஞ்சள் நிறத்தில் உள்ளன.

புளிய பழம்:-

🌿ஆறு சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது… இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான்.

🌿 அதில், புளிப்புச் சுவைக்காக உணவில் நாம் பயன்படுத்தும் விளைபொருள் புளி. அன்றாட உணவுகளில் சுவை  கூட்டுவதில்  புளிக்கு முக்கிய இடமுண்டு.

🌿புளியம்பழம்  3-8 அங்குல வளைந்த மேல் ஓட்டுக்களில் அடங்கியிருக்கும்.

🌿ஒரு ஓட்டில் (Pods) ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை விதையை மூடிய விழுதாக பழங்கள் இருக்கும்.

🌿புளிப்பும் இனிப்பு கலந்த பழங்கள், அமிலமும் சர்க்கரையும் சேர்ந்தவை. நன்றாக பழுத்தவுடன் மேலோடுகள் உடையும் நிலையில் இருக்கும். சுலபமாக மேலோட்டை உடைக்கலாம்.

🌿புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும்.

"பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய்"

 என்பது தமிழர் வழக்கம்.

🌿அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும்.
வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழவிளைச்சல் அதிகமாக இருக்கும்.

🌿புளியில் கால்சியம், வைட்டமின் 'பி' நிறைந்துள்ளது. இது தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு.

விதை:-

🌿தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும்.

🌿விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன.

🌿 பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன.

🌿வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின், நியாசின், கால்சியம், இரும்பு,  பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

🌿புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.

புளிய மரத்தின் பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Tuesday 2 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-2)


Image result for tamarind tree images


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

தன்மைகள்:-

🌳புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று.

🌳பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம்.

🌳இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.

🌳புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் வளரும்.

🌳அதிகமான கவனிப்பும் தேவையில்லை. சிறு செடிகளாக இருக்கும் போது உரங்கள் தேவை. மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது.

🌳உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு வளரும் புளியமரம், குளிரைத் தாங்காது. ஆனால் கடற்கரை ஓரங்களில் கூட வளரும்.

🌳வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது.

இரகங்கள்:-

🌳பிகேஎம். 1, உரிகம், தும்கூர், ஹாசனூர், ப்ரதிஸ்தான், டீ. டி எஸ் 1, யோகேஸ்வரி

புளிய மரத்தின் பாகங்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Monday 1 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-1)


Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

🌳புளி நாம் உபயோகிக்கும் புளியைத் தரும் புளியமரம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது.

🌳 ஆனால், தொன்று தொட்டு இந்தியாவில் உபயோகப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தோன்றியதாக, கருதப்படுகிறது.

🌳 புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று.

🌳புளிய மரம் பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். குடும்பம் சிசால்பினியேசி) (Caesalpinioidaeae).

🌳 இம்மரத்தின் தாவரவியல் பெயர் டேமரிண்டஸ் இண்டிகா (Tamarindus indica L.) என்பதாகும்.

🌳தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பரவலாக காணப்படும் புளியமரங்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் ஓங்கி வளர்ந்து நிழல் தருகின்றன.

🌳புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள்.

🌳 வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும்.

🌳தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.

🌳புளியமரம் இதற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு.

 புளிய மரத்தின் தன்மைகள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Sunday 30 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-8)



Related image


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் மருத்துவ குறிப்புகள் பற்றி பார்த்தோம்.

முருங்கைமரம் பட்டுப்போவது:-

🐞தேயிலை கொசு சாறு உறிஞ்சும் பூச்சி.

🐞இது முருங்கை, தேயிலை, கொட்டைமுந்திரி, கோ கோ, கொய்யா மற்றும் வேப்பமரங்களில் அதிக அளவில் தாக்குகிறது.குறிப்பாக முருங்கையில் இதன் தாக்கம் அதிகம்.

🐞நாவாய்பூச்சி இனத்தை சார்ந்தது. உருவத்தில் கொசுவைப் போன்று உள்ளதாலும், தேயிலை செடியில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் தேயிலை கொசு என அழைக்கப்படுகிறது.

🐞உடல் கருப்பு நிறத்திலும், முதுகு சிகப்பு மற்றும் வயிற்று பகுதி வெள்ளை நிற பட்டையாக காணப்படும்.

🐞மேலும் முதுகு புறத்தில் மிக நுண்ணிய குண்டு ஊசியை அடித்ததுபோல் இருக்கும்.

🐞இளம் மற்றும் முதிர்ச்சி அடைந்த தேயிலை கொசுவானது, அதனுடைய ஊசி போன்ற வாய் பகுதியிலிருந்து முருங்கையின் இளம் தளிர்கள், மொட்டுகள் மற்றும் குறுத்துகளில் சாற்றினை உறிஞ்சுகிறது.

🐞மேலும் ஒரு வித நச்சு திரவத்தையும் சுரப்பதால், குருத்துக்கள் முற்றிலும் வாடிவிடுகிறது.

தடுக்கும் முறை:-

🐞ஒரு லிட்டர் நீரில் வேப்பஎண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பம்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்து தாக்குதலை குறைக்கலாம்.

கம்பளிப் புழுக்கள்:-

🐛புதுத் துளிர் விடும்போதுதான் கம்பளிப் புழுக்களின் தாக்குதல் ஏற்படும்.

🐛இவை, இரவு நேரத்தில் மரங்களில் உள்ள இலைகளைத் தின்னும். காலையில் வெயில் பட்டவுடன் அடிமரத்தில் வந்து கூட்டமாக சேர்ந்துவிடும்.

🐛 இந்த நேரத்தில் அவற்றைச் சேகரித்து, தீயிட்டு அழித்துவிடலாம். மண்ணெண்ணெய் அல்லது துணிசோப்புக் கரைசலை அவற்றின் மீது ஊற்றினால் இறந்து விடும்.

🐛நான்கு பங்கு சாம்பலுடன் ஒரு பங்கு மிளகாய்த் தூள் கலந்தும் தூவி விடலாம். பூண்டு, இஞ்சி, மிளகாய்க் கரைசல் தெளித்தும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

🐛ஒரு கிலோ பூண்டு,  அரைகிலோ இஞ்சி, அரைகிலோ பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை தனித்தனியாக அரைத்து, 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலைவேளையில் பயிருக்குத் தெளிக்கலாம்.

🐛பூண்டில் ‘அலிசின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

 🐛பூஞ்சணங்களை வளர விடாது  பயிருக்கு சத்துப்பொருளாகவும் பயன்படும். இஞ்சி, மிளகாய் தாவரப் பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.

க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ல்:-

🐛கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்க்க அரிப்பு குறையும்.

🐛முருங்கை இலையை அரைத்து ப‌ற்றுப்போட‌ க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு குறையும்.

🐛 வெற்றிலையை சாறு வரும்படி அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.

பழமொழி அதன் அர்த்தம்:-

🌳முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்....!!!

ஏன் சொல்கிறார்களென தெரியுமா???

🌳இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.

🌳ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ந்தால் அவருக்கு பூ,இலை,காய்,பிசின்,பட்டை என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.

🌳முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை.

🌳இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.

இதைத் தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்"
என்று சொல்லி வைத்தார்கள்.

🌳ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா???

நாளை புளிய மரத்தை பற்றி பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Saturday 29 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-7)



Image result for moringa tree flowers



"என்னை அறிவீரா?? --  முருங்கை மரம்

நேற்று மரத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் சத்துக்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ குறிப்புகள்:-

சர்க்கரை நோய்:-

🌳சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்.

பெண்களுக்கு:-

🌳பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.

🌳தாய்ப்பாலை ஊறவைக்கும்.  வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.

🌳முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்காமலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

🌳இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படத்தும்.

குழந்தைகளுக்கு டானிக்:-

🌳வளரும் குழந்தைகளுக்கு முருங்கை டானிக்காக இருந்து சிறந்த பலனை கொடுக்கும். முருங்கை கீரையை சுத்தமாக கழுவி சாறு பிழிந்து  எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌳அதை பாலுடன் கலந்து பிறந்த குழந்தைகளுக்கும்-வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்து  வந்தால் இதிலுள்ள இரும்பு, சுண்ணாம்பு சத்து குழந்தையை திடமாக வளர உதவும்.

சிறுநீரகக்  கோளாறு:-

🌳ஒரு கரண்டி முருங்கை இலையின் சாறை எடுத்து அதில் கேரட் (அல்லது) வெள்ளரி சாற்றை ஒரு டம்ளர் சேர்த்து கலந்து குடித்து வரவும்.
இவ்வாறு  தினமும் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் நீங்கி விடும்.

 குறிப்பு:-

சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

தோல் வியாதிகள்:-

🌳சோரியாசிஸ் உள்ள இடத்தை கிருமி நாசினியால் துடைத்து, முருங்கை விதை ஒரு நாள் ஊற வைத்த தண்ணீரால் கழுவி வந்தால், சோரியாசிஸ் குணமாவதை கண் கூடாக பார்கலாம். அல்லது முருங்கைக் கீரையின் சாறை பிழுந்து தடவி வந்தாலும் சோரியாசிஸ் குறைவதை பார்கலாம்.

நாய்கடிக்கு:-

🌳நாய்க்கடியின் விஷத்தை முறிப்பதில் முருங்கை இலை சிறந்ததாக கருதப்படுகிறது.

🌳முருங்கை இலையோடு பூண்டு பல் இரண்டும், ஒரு துண்டு  மஞ்சள்(விரல் மஞ்சள்), சிறிதளவு மிளகு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு உட்கொள்ள வேண்டும்.

🌳இதனையே நாய்  கடித்த இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்தால் நாய் கடியால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். புண்ணும் விரைவில் ஆறிவிடும்.

இதன் மரம் பட்டுப்போவதை தடுப்பது மற்றும்  கம்பளிப்புழு கட்டுப்படுத்தும் முறை பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்

Friday 28 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-6)


Image result for moringa tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் இலையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள் மற்றும் சத்துக்கள்:

பூக்கள்:-

🌳நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.

 🌳முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

🌳முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

🌳அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.

முருங்கைப் பிஞ்சு:-

🌳முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.  இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

🌳இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

விதை:-

🌳முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.

இலைக்காம்பு:-

🌳சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.

🌳முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.

🌳தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.

முருங்கைப் பட்டை:-

🌳முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

முருங்கை வேர்:-

🌳வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்,  இரைப்பு, முதுகுவலி நீங்கும்.

இதன் சில நோய்களுக்கு மருத்துவ பயன்களை பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Thursday 27 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-5)

Image result for moringa tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் பாகங்கள் பற்றி பார்த்தோம்.

பயன்பாடுகள்:-

🌳வலுவ்வில்லாதது, காகிதம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

🌳ஒரு சில இடங்களில், தீக்குச்சிகளும் தயாரிக்கின்றனர்.

மருத்துவ பயன்களும் மற்றும் சத்துகளும்:-

இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை.

முருங்கை இலை:-

            ”வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை"
- இது பழமொழி.

🌳முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,
வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.

🌳முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

🌳,ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி விட,7 மடங்கு அதிகம்.

ü      கேரட்டில் உள்ள விட்டமின் ஏ விட,4 மடங்கு அதிகம்.

ü      பாலில் உள்ள கால்சியம் அளவை விட,4 மடங்கு அதிகம்.

ü      வாழைபழத்தில் உள்ள பொட்டாசிய அளவை விட,3 மடங்கு அதிகம்.

ü      பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ விட,3 மடங்கு அதிகம்.

 குறிப்பு:-

சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

🌳முருங்கை இலை சாறு இரத்தை சுத்தம் செய்வதுடன் , எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

🌳ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்..

🌳தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும்.

🌳சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

🌳மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

 இலைகளில் இன்னும் பல மருத்துவ குணங்கள் இருக்கு.

இதன் பயன்கள் பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Wednesday 26 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-4)


Image result for drumstick tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் வகைகள் பற்றி பார்த்தோம்.

பாகங்கள்:-

🌳5-15 மீட்டர் உயரம் வளருகிறது. முருங்கை இலை, பூக்கள், காய், பட்டை, வேர்கள், பிசின் முதலியன....

முருங்கை இலை:-

🌳முருங்கை இலை சிறிய வட்ட வடிவம் கொண்டது. இதன் இலையும் கிளையும் எளிதில் உடைய கூடியது.

🌳முருங்கை இலைகளில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் என்பன உண்டு.

🌳முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும்.

முருங்கை பூக்கள்:-

🌳பிப்ரவரி மாதத்திற்குமேல் ரகத்தைப் பொறுத்து நீண்ட நாட்கள் பூக்கும்.

 🌳பூங்கொத்திக்களில், வெண்மை நிறப் பூக்களும் மொட்டுக்களும் அடர்ந்திருக்கும். பூக்கள் சிறிது நறுமணமுடையவை.

🌳முருங்கையில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். ஆதலால் காலை வேலையில் வரும் தேனீக்கள் தான் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவி செய்கிறது.

🌳இந்த பூக்களில் உள்ள தேனை  எடுக்க  பறவைகள் மரத்தை நாடி  வரும்.

🌳கடும் வறட்சியில்தான் முருங்கை பூ பூக்கும். பூக்கும் சமயத்தில் லேசாக மழை தூறல் வந்தால் கூட மகரந்தச் சேர்க்கை ஏற்படாமல் பூ கொட்டிவிடும். பிஞ்சு இறங்காது.

🌳நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.

முருங்கை காய்:-

முருங்கைப் பிஞ்சு:-

விதை:-

பிசின்:-

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Tuesday 25 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-3)



Related image

"என்னை அறிவீரா???
(தாவரத்தின் குரல்)"

"முருங்கை மரம் பாகம்-3"

நேற்று மரத்தின் வளரியல்பு பற்றி பார்த்தோம்.

வகைகள்:-

🌳தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

🌳விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

🌳ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.

முருங்கை சாகுபடி செய்யும் வகைகள்:-

🌳முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன.

🌳இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-2)




Image result for drumstick tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

வளரியல்பு:-

🌳முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது.

🌳இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

🌳தண்ணீர் அதிகம் தேவையில்லை, வெப்பத்தைத் தாங்கக் கூடியது. அதிக குளிரில் வளராது.

🌳முருங்கை முழுத் தாவரமும், கைப்பு, துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது.

🌳குளிர்ச்சித் தன்மையானது. வெப்பம் உண்டாக்கும்: கோழையகற்றும்: சிறுநீரைப் பெருக்கும்; இசிவை அகற்றும்.

🌳இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் இதை வருடா வருடம் 3 அடி விட்டு கிளைகளை வெட்டி விடுவார்கள்.

🌳மலைகளிலும் காடுகளிலும் வளரும் முருங்கை கசப்பாக இருப்பதால் சமையலுக்கு உதவாது.

🌳முற்றிய கொம்புகளை 3 அடி உயரத்தில் வெட்டி நட்டு அதன் நுனியில் பச்சைச் சாணம் வைத்து உயிர் பிழைக்கச் செய்வர். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

நாளை முருங்கை மரத்தின் வகைகளை பற்றி பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Monday 24 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-1)



Image result for murungai maram images

"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

🌳முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர்.  முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

 🌳வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

🌳பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர்.  அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

🌳பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும்.  எளிதில் உடையும் தன்மை கொண்டது.  இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

🌳முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது.

 🌳முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.

🌳இது இந்தியா முழுமைக்கும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- வேப்பமரம் (பாகம்-6)


Image result for neem tree images

"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்

நேற்று வேப்பெண்ணெய் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள்:-

🌳வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

🌳கார்த்திகை மாதம் விடுகின்ற வேப்ப இலை  கொழுந்தை இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டு வர பாம்பு விடம்(விஷம்)  நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் (விஷம்) ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும்.

🌳வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

🌳வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும்.

🌳வேம்பு இலை,வேப்பம் பூ குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Sunday 23 April 2017

தாவரத்தின் குரல் -- வேப்பமரம் (பாகம்-5)



Image result for neem tree images



"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்

நேற்று வேம்பு பயன்பாடுகள் பற்றி பார்த்தோம்.

வேப்பெண்ணெய்:-

🌳வேப்பெண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ  விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும்  எண்ணெய் ஆகும்.

 🌳கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும்.

🌳உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர். அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும்.

🌳ஒரு மணமும்,  கசப்புத்தன்மையும்  உடைய இந்த எண்ணெய்  மருத்துவக்  குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும் இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.

🌳வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது.  நிலக்கடலை,  பூண்டு  ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது.

🌳இது பெரும்பாலும்  டிரைகிளிசரைடுகள்,மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்

Friday 21 April 2017

தாவரத்தின் குரல் -- வேப்பமரம் (பாகம்-4)



Related image

"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்

நேற்று வேம்பு பாகங்கள் பற்றி பார்த்தோம்.

பயன்பாடு:-

🌳வேம்பு பல வகை பயன்கள் அளிக்க வல்லது.

 🌳கட்டுமானத்திற்கும், மரச்சாமான்கள், வண்டி, கோடாரி, படகு மற்றும் பல பொருட்கள் செய்ய பயன்படுகிறது.

🌳 விதைகள் 20-30 சதவிகிதம் எண்ணெய் தரக்கூடியது. இவை மருந்துபொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றது.

 🌳வேம்பு இலைகளில் 12-18 சதவிகிதம் புரதச் சத்து நிரம்பியுள்ளதால் ஆடுகள் மற்றும் ஒட்டகத்திற்கு சிறந்த தீவனமாகும்.

🌳இதன் எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலை முக்கியமாகக் கொசு விரட்டியாகப் பயன்படுகிறது.

🌳வேப்பெண்ணையில் உள்ள அசாடிராக்டின் என்ற பொருள் பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- வேப்பமரம் (பாகம்-3)


Image result for neem tree images


"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்

நேற்று வேம்பு வளரியல்பு மற்றும் வகைகள் பற்றி பார்த்தோம்.

பாகங்கள்:-

வேம்பு இலை, பூ, பழங்கள், விதை, பட்டை

வேம்பு இலை:-

🌳வேம்பு இலைகள், இறகு வடிவமானவை.
கூர் நுனிப் பற்களுள்ள பல சிற்றிலைகளைக் கொண்டவை,

🌳ஒவ்வொரு சிற்றிலையும் சாதாரண இலையைப் போன்றே காணப்படும்.

🌳இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது.

வேம்பு பூக்கள்:-

🌳வேம்பு பூக்கள், சிறியவை, வெண்மையானவை, சிறு கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

🌳வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களை கொண்டது.

🌳மார்ச்சு – ஏப்ரலில் பூக்கள் பூக்கும்.

வேம்பு பழம்:-

🌳வேம்பு காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். வேம்பு பழங்கள், 1.5செ.மீ. வரை நீளமானவை, முட்டை வடிவச் சதைகளையும் ,மஞ்சள் நிறத்தில்  காணப்படுகிறது.

🌳ஒவ்வொரு பழத்திலும் ஒரு விதை காணப்படும். வேம்பு பழங்கள், பறவைகள் விலங்குகளால் உண்ணப்பட்டு, அவற்றின் எச்சத்தின் மூலமாக விதைகள் பரவலடைகின்றன.

🌳ஜூன் – ஜூலையில் கனிகள்(பழம்) உருவாகும்.

வேம்பு விதை:-
இயற்கையாக வளர்தல்:-
செயற்கையான முறைகள்:-

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்

Thursday 20 April 2017

தாவரத்தின் குரல் -- வேப்பமரம் (பாகம்-2)



Image result for neem tree images


"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்

நேற்று வேம்பு பற்றி பார்த்தோம்.

வளரியல்பு:-

🌳வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது.

🌳ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது.

 🌳இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும்.

🌳இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.

 🌳வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது.

வகைகள்:-

🌳கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக் கூறப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- வேப்பமரம் (பாகம்-1)


Image result for neem tree images

"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்

🌳வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம்.

🌳தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா (AZADIRACHTA INDICA Adv.Juss ). தாவரக்குடும்பம் மீலியேசி (Meliaceae).

🌳வேம்பின் பூர்விகம் இந்தியா.

🌳இந்தியா முழுவதும், சாலையோரங்கள், மக்களின் பிற உபயோகங்களுக்காகப் பெருமளவில் வளர்க்கப்படுகிறது.

🌳வேம்பு முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
மனிதனை வாழவைக்கும் அமுத சுரபியாகும்.

🌳இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம்.

🌳வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது.

🌳 வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.

வேறு பெயர்கள்:-

பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன.

இந்த மரத்தின் தன்மைகள் பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Wednesday 19 April 2017

தாவரத்தின் குரல் -- ஆல மரம் (பாகம்-3)




Image result for aalamaram images


"என்னை அறிவீரா?? -- ஆல மரம்

மருத்துவ பயன்கள்:-

🌳ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.

🌳 சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின்மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

🌳சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன.

🌳இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.

🌳ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும்.

🌳 அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன்,ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்

Tuesday 18 April 2017

தாவரத்தின் குரல் -- ஆல மரம் (பாகம்-2)


Related image


"என்னை அறிவீரா?? -- ஆல மரம்

தன்மைகள்:-

🌳மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.

🌳அரச மரம் போல ஆல மரமும் உயர்ந்து வளரும். அதே போல் பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டவை.

🌳மழை வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கபடாதது.

🌳இது 20 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மிகவும் பருத்த அடி மரத்தைக் கொண்டது.

🌳அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடும். கிளைகளிலிருந்து மெல்லிய வேர்கள் தோன்றிக் கீழ்நோக்கி வளர்கின்றன.

பாகங்கள்:-

🌳ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுது போன்றவைகள்   உள்ளன.

பழம்:-

பயன்கள்:-

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- ஆல மரம் (பாகம்-1)


Image result for aalamaram images



"என்னை அறிவீரா?? --  ஆல மரம்

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்று ஆலமரமும் வேல மரமும் புகழப்படுகின்றன.

(நாலும் இரண்டும்=வெண்பா, குறள் பாக்கள் வகை).

🌳தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் இது ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது.

🌳ஆழமாக வேரூன்றி, விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

🌳 இதை ஆல் என்றும் அழைப்பர். இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது.

🌳 இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டு மரமாக வளர்கிறது. சாலை ஓரங்கள், ஆலயங்கள், மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகிலும் கிராமப் பொது இடங்களிலும் வளர்க்கப்படுகின்றது.

🌳இந்தியாவின் தேசிய மரம் தமிழ், சம்ஸ்கிருத கவிஞர்கள் பாடிய மரம்,
சால்மான் ருஷ்டி, சதே,டேனியல் டீபோ கதைகளில் வரும் மரம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Monday 17 April 2017

தாவரத்தின் குரல் -- அரச மரம் (பாகம்-5)


Image result for arasamaram images

"என்னை அறிவீரா?? -- அரச மரம்

நேற்று பாகங்கள் மற்றும் பொருட்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ குணங்கள்:-

🌳அரசமரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கரந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

🌳அரச இலைச் கொழுந்தைப் பசும் பாலில் இட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் குடிக்க சுரம் குணமாகும்.

🌳அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

🌳அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரி;த்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவிவலி, தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.

🌳அரசமரக் கொழுந்து, ஆலங்கொழுந்து அத்திக்கொழுந்து இவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்து உட்கொண்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வடிதல் நிற்கும்.

🌳அரச விதை, ஆலம் விதை நம அளவு எடுத்து அரைத்து. அதைப் பாலில் கலந்து உண்ண ரத்த வாந்தி நிற்கும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்

தாவரத்தின் குரல் -- அரச மரம் (பாகம்-4)




Image result for arasamaram images


"என்னை அறிவீரா?? -- அரச மரம்

நேற்று மரத்தை வலம் வருதல் பற்றி பார்த்தோம்.

அரச மரத்தின் பாகங்கள்:-

பூ,வேர்,பட்டை ,இலை மொக்கு , இலை, பழம், அரசமரப் பட்டை போன்றவைகள் உள்ளன.

இலை:-

🌳அரச மரம் கூரிய இலைகளையுடைய பெருமரம், இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது.

🌳வட இந்தியாவில் இலைகள் பட்டுப் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.

பூக்கள்:-

🌳ஜூலை, ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பூக்கும், அதன்பின் பழங்கள் உருவாகி  உதிரும்.

காய்:-

🌳பூவின் இருந்து காய் உருவாகிறது.

பழம்:-
தழை:-
பட்டை:-
அரச மரக்குச்சி:-
மரம்:-
பயிர் முறை:-
பொருட்கள்:-

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Sunday 16 April 2017

தாவரத்தின் குரல் -- அரச மரம் (பாகம்-3)



Image result for arasamaram images

"என்னை அறிவீரா?? -- அரச மரம்

நேற்று பிராணவாயு,அதிக வெப்பத்தையும் தாங்கும மற்றும் போதிமரம் பற்றி பார்த்தோம்.

மரத்தை வலம் வருதல்:-

🌳அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை.

🌳இதன் காரணமாகவேஅரசினை நம்பி புருசனை கைவிட்டாள்"
என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது.

🌳 அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

"அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்" என்ற பழமொழி உண்டு.

🌳இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும்.

வலம்வரும் விதிமுறை:-
வலம் வருவதில் உள்ள அறிவியல்:-

எழுத்து

#.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- அரச மரம் (பாகம்-2)



Image result for arasamaram images


"என்னை அறிவீரா?? -- அரச மரம்

நேற்று அரச மரத்தை பற்றியும் அதன் தன்மைகளையும் பார்த்தோம்.
அரச மரத்தின் பாகங்கள்:-
பிராணவாயு:-

🌳நன்கு வளர்ந்த அரச மரம்
பகல் பொழுதில் தன உணவு தயாரிப்பதற்கு உண்டாகும் ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரவியல் ஆய்வின்படி அரசமரம் ஒன்று ,நாளொன்றுக்கு கிட்டத்தட்ட வாயு மண்டலத்தில் உள்ள1800கிலோ கார்பன் டை ஆக்ஸைடை கிரகித்துக் கொள்கிறது.
🌳அது மட்டுமல்லாமல் அந்நிகழ்வின் போது சுமார் 2400 கிலோ ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.

🌳இதன் விளைவால் அம்மரத்தைச் சுற்றி வரும் மனிதர்களும் பிற உயிரினங்களும் ஆக்ஸிஜனை தடையின்றி சுவாசித்திடும் நிலை உருவாகின்றது.
🌳வாயு மண்டலத்தை தூய்மை படுத்திடும் பண்பு தாவரங்களில் அரச மரத்திற்கு மட்டுமே அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது.


எழுத்து

#.முகேஷ்

Saturday 15 April 2017

தாவரத்தின் குரல் -- அரச மரம் (பாகம்-1)




Image result for arasamaram images

"என்னை அறிவீரா?? -- அரச மரம்


🌳நமது பாரம்பரியமான மரங்களைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு மற்றும் மருத்துவக் குணங்கள் பற்றியும் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறோம்.
 🌳அந்தவகையில், இன்று மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரச மரம் பற்றிப் பார்ப்போம்

🌳பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர்.

🌳இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.
தன்மை:-

🌳அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும்.
🌳சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது.

🌳ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.
🌳தமிழகம் எங்கும் வளர்கின்றது. சிற்றரசு, பேரரசு, கொடியரசு, பூவரசு இதன் வகைகளாகும்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠

Friday 14 April 2017

தாவரத்தின் குரல் -- பூவரசம் (பாகம்-4)


Image result for poovarasu tree images



"என்னை அறிவீரா?? -- பூவரசம் () பூவரசு

நேற்று  மருத்துவ குணங்கள் பற்றி பார்த்தோம்.

பொருட்கள்:-

🌳 பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு... "நாட்டுத் தேக்கு" என்று புகழப்படும் அளவுக்கு, வலிமையான மரமும்கூட.

🌳 அதனாலேயே... இந்த மரங்களை வெட்டி, தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என பயன்படுத்துவது தொடர்கிறது.

🌳பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் செய்வதற்கு அந்த காலத்தில் பூவரசு மரத்தின் பலகையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பூவரச மரத்தை சீண்டுவாரில்லை. ஆனாலும் இன்றைக்கும் பூவரசின் மகத்துவம் அறிந்தவர்கள் இதனை தேடித் தேடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

🌳மரத்தைப் பலகைகளாக அறுத்துப் பெட்டி, வண்டிச் சக்கரம், படகு, நாற்காலி, வண்டி, துப்பாக்கிக் கட்டை, வேளாண் கருவி, இசைக்கருவி, விட்டம் ஆகியவற்றைச் செய்யலாம். மரத்தை விறகாகப் பயன்படுத்தலாம். உறுதியான இம்மரக்கட்டை நீரால் பாதிக்கப்படாது.

இயற்கை உரம்:-

🌳இதன் இலை மற்றும் பூக்களை கொண்டு இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

🌳பூவரசு மரத்தின் அடி பகுதியில் உள்ள மண் ஈரப்பதத்துடன் காணப்படும்..

அழிவின் விளிம்பில்:-

🌳இதய வடிவ இலைகளையுடைய பூவரச மரம் தற்பொழுது அழிந்து வருகிறது. வீட்டுக்குத் தேவையான பலகைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் காற்றை சுத்தப்படுத்தும் சூழலியல் நண்பன் என பன்முகம் கொண்டது.

🌳 இந்த பூவரசு மரங்களை வீடுகள், சாலையோரங்கள், காலியிடங்களிலெல்லாம் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். புயலைத்தாங்கி வளரும் தன்மையும் உடையதால் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் பூவரச மரங்களை நடலாம்.

🌏புவியெங்கும் பூவரசு வளர்ந்தால் காற்று மாசு ஓரளவுக்காவது குறைந்து, பூமி சூடாவதில் இருந்து ஓரளவுக்காவது காக்க முடியும்.


🌳ஆனால் நகரங்களில் இந்த இலையின் பெயரே தெரியவில்லை. காரணம் மரங்கள் அழிக்கப்பட்டு மனைகளாக மாற்றப்பட்டதன் விளைவு.

🌳ஆனால் நாம் நினைத்தால் ஒருமரமாவது வீட்டு பின்புறம் வளர்க்கலாம் .
பூவரசு மரம் வளர்ப்பது பெரிய கஷ்டமே இல்லை ,பூவரசு மரத்தின் ஒரு சிறிய போத்தை வெட்டி நட்டுவைத்தாலே போதும்.

🌳அது துளிர் விடும்வரை சிறிதளவு தண்ணீர் விட்டுவந்தாலே போதும் பிரமாதமாக வளர்ந்துவிடும்.

🌳பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... இயற்கை மருத்துவர் என்ற கூறலாம்.

  🌳 சித்தர்கள்  காயசித்தி மரம் என்று அழைக்கப்படும் மரத்தை  மீட்டெடுக்கும் முயற்சியை நாம் மேற்கொள்ளவேண்டும்.

பூவரசம் மரத்தை பற்றி முழுமையாக பார்த்தோம்...

நாளை கருவேல மற்றும் சீமை கருவேல மரங்கள் பற்றி பார்ப்போம்....

எழுந்து

#.முகேஷ்*⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- பூவரசம் (பாகம்-3)


Image result for poovarasu tree images


"என்னை அறிவீரா?? -- பூவரசம் () பூவரசு

நேற்று  இலை, பூ,காய், பட்டை மற்றும் வேர் முதலியன பாகங்களை பார்த்தோம்.

மருத்துவ குணங்கள்:-
🌳பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கும் இலவச மருத்துவமனை. மிகச் சிறந்த தோல் மருத்துவர்.

🌳தோல் தொடர்பான பல நோய்களுக்கான தீர்வு இந்த மரத்தில் இருக்கிறது. சாதாரணமாக தோலில் ஏற்படும் எச்சில் தழும்பு தொடங்கி, தொழுநோய் வரையான பல்வேறு சரும நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

🌳பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது

🌳பூவரசம் பட்டையை பொடித்து சலித்து அதனுடன் சந்தனத் தூள் அல்லது வில்வ கட்டைத் தூள் கலந்து சருமத்தில் மீது பூசிவந்தால் சருமத்தில் உண்டாகும் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் அகலும்

🌳 பூவரசம் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் கசியும். அதை எச்சில் தழும்பு, சொறி, சிரங்கு, படை, விஷக்கடி உள்ள இடங்களில் தடவி வந்தால் முற்றிலும் குணமாகும்.
🌳நூற்றாண்டுக்கு சென்றதொடு நூண் பூ வரசம்வேர் தூறாண்ட குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை விதைப்பூப் பட்டையிவை கண்டாற் புழுத்தபுண்வி ரேசனமும் போம்.
 - அகத்தியர் குணபாடம்.
🌳குணம் - நூறாண்டுகள் சென்ற பூவரசம் வேர் நாட்பட்ட பெருநோயை நீக்கும்

🌳 பழுப்பிலை, பூ, விதை, காய், பட்டை முதலியவை  பழுத்த புண், காணாக்கடி, குத்தல், விடபாகம், பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, வெள்ளை இவைகளைப் போக்கும் தன்மை கொண்டது.
🌳பூவரசு இலையை நன்கு இடித்துத் துவையலாக மசித்து, பின் சூடுசெய்து துணியில் பொட்டலமாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும்.

🌳 உடலில் அடிபட்டு வீக்கமான இடங்களில் இந்தப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுக்க, வீக்கமும் வலியும் ஒருசேரக் குறையும்.

🌳மூட்டு வலியினால் நீர்க்கோத்துக் காணப்படும் வீக்கமும் சரியாகும். காய்ந்த பழுப்பு இலையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து சரும நோய்களுக்கு வெளிப் பூச்சாகப் பூசலாம்.
🌳பழுப்பு இலையைத் தீயில் கருக்கி சாம்பலாக்கி, அதனைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால், சரும அரிப்பு, கரப்பான் உள்ளிட்டவை குணமாகும்.
நாளை இதில் பெறப்படும் பொருட்கள் பற்றி பார்ப்போம்.

எழுத்து

#.முகேஷ்⁠⁠⁠⁠