Sunday, 30 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-8)



Related image


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் மருத்துவ குறிப்புகள் பற்றி பார்த்தோம்.

முருங்கைமரம் பட்டுப்போவது:-

🐞தேயிலை கொசு சாறு உறிஞ்சும் பூச்சி.

🐞இது முருங்கை, தேயிலை, கொட்டைமுந்திரி, கோ கோ, கொய்யா மற்றும் வேப்பமரங்களில் அதிக அளவில் தாக்குகிறது.குறிப்பாக முருங்கையில் இதன் தாக்கம் அதிகம்.

🐞நாவாய்பூச்சி இனத்தை சார்ந்தது. உருவத்தில் கொசுவைப் போன்று உள்ளதாலும், தேயிலை செடியில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் தேயிலை கொசு என அழைக்கப்படுகிறது.

🐞உடல் கருப்பு நிறத்திலும், முதுகு சிகப்பு மற்றும் வயிற்று பகுதி வெள்ளை நிற பட்டையாக காணப்படும்.

🐞மேலும் முதுகு புறத்தில் மிக நுண்ணிய குண்டு ஊசியை அடித்ததுபோல் இருக்கும்.

🐞இளம் மற்றும் முதிர்ச்சி அடைந்த தேயிலை கொசுவானது, அதனுடைய ஊசி போன்ற வாய் பகுதியிலிருந்து முருங்கையின் இளம் தளிர்கள், மொட்டுகள் மற்றும் குறுத்துகளில் சாற்றினை உறிஞ்சுகிறது.

🐞மேலும் ஒரு வித நச்சு திரவத்தையும் சுரப்பதால், குருத்துக்கள் முற்றிலும் வாடிவிடுகிறது.

தடுக்கும் முறை:-

🐞ஒரு லிட்டர் நீரில் வேப்பஎண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பம்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்து தாக்குதலை குறைக்கலாம்.

கம்பளிப் புழுக்கள்:-

🐛புதுத் துளிர் விடும்போதுதான் கம்பளிப் புழுக்களின் தாக்குதல் ஏற்படும்.

🐛இவை, இரவு நேரத்தில் மரங்களில் உள்ள இலைகளைத் தின்னும். காலையில் வெயில் பட்டவுடன் அடிமரத்தில் வந்து கூட்டமாக சேர்ந்துவிடும்.

🐛 இந்த நேரத்தில் அவற்றைச் சேகரித்து, தீயிட்டு அழித்துவிடலாம். மண்ணெண்ணெய் அல்லது துணிசோப்புக் கரைசலை அவற்றின் மீது ஊற்றினால் இறந்து விடும்.

🐛நான்கு பங்கு சாம்பலுடன் ஒரு பங்கு மிளகாய்த் தூள் கலந்தும் தூவி விடலாம். பூண்டு, இஞ்சி, மிளகாய்க் கரைசல் தெளித்தும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

🐛ஒரு கிலோ பூண்டு,  அரைகிலோ இஞ்சி, அரைகிலோ பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை தனித்தனியாக அரைத்து, 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலைவேளையில் பயிருக்குத் தெளிக்கலாம்.

🐛பூண்டில் ‘அலிசின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

 🐛பூஞ்சணங்களை வளர விடாது  பயிருக்கு சத்துப்பொருளாகவும் பயன்படும். இஞ்சி, மிளகாய் தாவரப் பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.

க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ல்:-

🐛கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்க்க அரிப்பு குறையும்.

🐛முருங்கை இலையை அரைத்து ப‌ற்றுப்போட‌ க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு குறையும்.

🐛 வெற்றிலையை சாறு வரும்படி அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.

பழமொழி அதன் அர்த்தம்:-

🌳முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்....!!!

ஏன் சொல்கிறார்களென தெரியுமா???

🌳இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.

🌳ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ந்தால் அவருக்கு பூ,இலை,காய்,பிசின்,பட்டை என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.

🌳முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை.

🌳இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.

இதைத் தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்"
என்று சொல்லி வைத்தார்கள்.

🌳ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா???

நாளை புளிய மரத்தை பற்றி பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Saturday, 29 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-7)



Image result for moringa tree flowers



"என்னை அறிவீரா?? --  முருங்கை மரம்

நேற்று மரத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் சத்துக்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ குறிப்புகள்:-

சர்க்கரை நோய்:-

🌳சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்.

பெண்களுக்கு:-

🌳பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.

🌳தாய்ப்பாலை ஊறவைக்கும்.  வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.

🌳முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்காமலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

🌳இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படத்தும்.

குழந்தைகளுக்கு டானிக்:-

🌳வளரும் குழந்தைகளுக்கு முருங்கை டானிக்காக இருந்து சிறந்த பலனை கொடுக்கும். முருங்கை கீரையை சுத்தமாக கழுவி சாறு பிழிந்து  எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌳அதை பாலுடன் கலந்து பிறந்த குழந்தைகளுக்கும்-வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்து  வந்தால் இதிலுள்ள இரும்பு, சுண்ணாம்பு சத்து குழந்தையை திடமாக வளர உதவும்.

சிறுநீரகக்  கோளாறு:-

🌳ஒரு கரண்டி முருங்கை இலையின் சாறை எடுத்து அதில் கேரட் (அல்லது) வெள்ளரி சாற்றை ஒரு டம்ளர் சேர்த்து கலந்து குடித்து வரவும்.
இவ்வாறு  தினமும் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் நீங்கி விடும்.

 குறிப்பு:-

சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

தோல் வியாதிகள்:-

🌳சோரியாசிஸ் உள்ள இடத்தை கிருமி நாசினியால் துடைத்து, முருங்கை விதை ஒரு நாள் ஊற வைத்த தண்ணீரால் கழுவி வந்தால், சோரியாசிஸ் குணமாவதை கண் கூடாக பார்கலாம். அல்லது முருங்கைக் கீரையின் சாறை பிழுந்து தடவி வந்தாலும் சோரியாசிஸ் குறைவதை பார்கலாம்.

நாய்கடிக்கு:-

🌳நாய்க்கடியின் விஷத்தை முறிப்பதில் முருங்கை இலை சிறந்ததாக கருதப்படுகிறது.

🌳முருங்கை இலையோடு பூண்டு பல் இரண்டும், ஒரு துண்டு  மஞ்சள்(விரல் மஞ்சள்), சிறிதளவு மிளகு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு உட்கொள்ள வேண்டும்.

🌳இதனையே நாய்  கடித்த இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்தால் நாய் கடியால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். புண்ணும் விரைவில் ஆறிவிடும்.

இதன் மரம் பட்டுப்போவதை தடுப்பது மற்றும்  கம்பளிப்புழு கட்டுப்படுத்தும் முறை பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்

Friday, 28 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-6)


Image result for moringa tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் இலையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள் மற்றும் சத்துக்கள்:

பூக்கள்:-

🌳நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.

 🌳முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

🌳முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

🌳அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.

முருங்கைப் பிஞ்சு:-

🌳முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.  இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

🌳இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

விதை:-

🌳முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.

இலைக்காம்பு:-

🌳சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.

🌳முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.

🌳தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.

முருங்கைப் பட்டை:-

🌳முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

முருங்கை வேர்:-

🌳வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்,  இரைப்பு, முதுகுவலி நீங்கும்.

இதன் சில நோய்களுக்கு மருத்துவ பயன்களை பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Thursday, 27 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-5)

Image result for moringa tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் பாகங்கள் பற்றி பார்த்தோம்.

பயன்பாடுகள்:-

🌳வலுவ்வில்லாதது, காகிதம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

🌳ஒரு சில இடங்களில், தீக்குச்சிகளும் தயாரிக்கின்றனர்.

மருத்துவ பயன்களும் மற்றும் சத்துகளும்:-

இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை.

முருங்கை இலை:-

            ”வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை"
- இது பழமொழி.

🌳முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,
வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.

🌳முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

🌳,ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி விட,7 மடங்கு அதிகம்.

ü      கேரட்டில் உள்ள விட்டமின் ஏ விட,4 மடங்கு அதிகம்.

ü      பாலில் உள்ள கால்சியம் அளவை விட,4 மடங்கு அதிகம்.

ü      வாழைபழத்தில் உள்ள பொட்டாசிய அளவை விட,3 மடங்கு அதிகம்.

ü      பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ விட,3 மடங்கு அதிகம்.

 குறிப்பு:-

சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

🌳முருங்கை இலை சாறு இரத்தை சுத்தம் செய்வதுடன் , எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

🌳ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்..

🌳தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும்.

🌳சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

🌳மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

 இலைகளில் இன்னும் பல மருத்துவ குணங்கள் இருக்கு.

இதன் பயன்கள் பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Wednesday, 26 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-4)


Image result for drumstick tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

நேற்று மரத்தின் வகைகள் பற்றி பார்த்தோம்.

பாகங்கள்:-

🌳5-15 மீட்டர் உயரம் வளருகிறது. முருங்கை இலை, பூக்கள், காய், பட்டை, வேர்கள், பிசின் முதலியன....

முருங்கை இலை:-

🌳முருங்கை இலை சிறிய வட்ட வடிவம் கொண்டது. இதன் இலையும் கிளையும் எளிதில் உடைய கூடியது.

🌳முருங்கை இலைகளில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் என்பன உண்டு.

🌳முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும்.

முருங்கை பூக்கள்:-

🌳பிப்ரவரி மாதத்திற்குமேல் ரகத்தைப் பொறுத்து நீண்ட நாட்கள் பூக்கும்.

 🌳பூங்கொத்திக்களில், வெண்மை நிறப் பூக்களும் மொட்டுக்களும் அடர்ந்திருக்கும். பூக்கள் சிறிது நறுமணமுடையவை.

🌳முருங்கையில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். ஆதலால் காலை வேலையில் வரும் தேனீக்கள் தான் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவி செய்கிறது.

🌳இந்த பூக்களில் உள்ள தேனை  எடுக்க  பறவைகள் மரத்தை நாடி  வரும்.

🌳கடும் வறட்சியில்தான் முருங்கை பூ பூக்கும். பூக்கும் சமயத்தில் லேசாக மழை தூறல் வந்தால் கூட மகரந்தச் சேர்க்கை ஏற்படாமல் பூ கொட்டிவிடும். பிஞ்சு இறங்காது.

🌳நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.

முருங்கை காய்:-

முருங்கைப் பிஞ்சு:-

விதை:-

பிசின்:-

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Tuesday, 25 April 2017

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-3)



Related image

"என்னை அறிவீரா???
(தாவரத்தின் குரல்)"

"முருங்கை மரம் பாகம்-3"

நேற்று மரத்தின் வளரியல்பு பற்றி பார்த்தோம்.

வகைகள்:-

🌳தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

🌳விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

🌳ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.

முருங்கை சாகுபடி செய்யும் வகைகள்:-

🌳முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன.

🌳இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- முருங்கை மரம் (பாகம்-2)




Image result for drumstick tree images


"என்னை அறிவீரா?? -- முருங்கை மரம்

வளரியல்பு:-

🌳முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது.

🌳இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

🌳தண்ணீர் அதிகம் தேவையில்லை, வெப்பத்தைத் தாங்கக் கூடியது. அதிக குளிரில் வளராது.

🌳முருங்கை முழுத் தாவரமும், கைப்பு, துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது.

🌳குளிர்ச்சித் தன்மையானது. வெப்பம் உண்டாக்கும்: கோழையகற்றும்: சிறுநீரைப் பெருக்கும்; இசிவை அகற்றும்.

🌳இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் இதை வருடா வருடம் 3 அடி விட்டு கிளைகளை வெட்டி விடுவார்கள்.

🌳மலைகளிலும் காடுகளிலும் வளரும் முருங்கை கசப்பாக இருப்பதால் சமையலுக்கு உதவாது.

🌳முற்றிய கொம்புகளை 3 அடி உயரத்தில் வெட்டி நட்டு அதன் நுனியில் பச்சைச் சாணம் வைத்து உயிர் பிழைக்கச் செய்வர். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

நாளை முருங்கை மரத்தின் வகைகளை பற்றி பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠