Friday 5 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-7)



Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

 *****************பேய் இருக்க!! இல்லையா!!!*************

நேற்று புளிய மரத்தின் பாகங்களில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்த்தோம்.

புளிய மரத்தில் பேய் இருக்க!!!:-

"இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்க கூடாது, பேய் வந்து அடித்துவிடும் என்று கூறுவர்"

👻பேய் என்ற ஒன்று இல்லை என்று தைரியமாக கூறுவோறும் இரவில் ஆளில்லா தெருவில் இருக்கும் புளிய மரத்தை கண்டால் பயம் கொள்வது இயற்கையே.

👻 புளிய மரங்கள் பகலில் தூய்மையான காற்றையும் O2 இரவு நேரங்களில் மோனோ  கார்பன்டையாக்சைடையும் CO2 வெளியேற்றும்.

👻இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்கினால் மூச்சடைப்பு ஏற்படும். யாரோ மேலேயிருந்து அழுத்துவது போல இருக்கும்.

👻 இது போன்ற விஞ்ஞான விளக்கத்தை கூறினால் யாரேனும் நம்புவார்களா? நாம் தான் பகுத்தறிவாளர்களாயிற்றே??

👻கடவுளை ஏற்க்கமாட்டோம் ஆனால் பேய்களை நம்புவோமே. அதனால் தான் நாம் முன்னோர்கள் இரவில் பேய்கள் வாசம் செய்கிறது என்று புரளியை கிளப்பிவிட்டனர்.

👻ஆடு, மாடுகள், குதிரை இவற்றை இம்மரத்தின் கீழ் கட்டக் கூடாது.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Thursday 4 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-6)


Image result for tamarind tree images

"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பயன்கள் பற்றி பார்த்தோம்.

பாகங்களில் உள்ள மருத்துவ பயன்கள்:-

இலை:-

💊இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது.
புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

💊வீக்கம் கரையப் புளிய இலையை வதக்கிச் சூடு பொறுக்குமளவில் ஒற்றடம் கொடுத்த பின் கட்டுவதுண்டு.

💊 புளியம் இலை, வேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி அந்நீரைக் கொண்டு புண்களைக் கழுவ ஆறாதப் புண்கள் விரைவில் குணமாகும்.

💊புளி இலை இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

💊புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம்.

💊புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

💊புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது.

புளிய பழம்:-

💊புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.
புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.

💊புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.

💊புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.

💊மது‬ அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.

புளிய மரத்தின் தீமைகள் பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-5)


Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பயன்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள்:-

"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்"

💊என்றொரு பழமொழி சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம் வேறு.

💊ஆ-நெய் என்றால் பசு நெய், பூ-நெய் என்றால் தேன். 40 வயதுக்குள் பசுநெய் சாப்பிட வேண்டும்... அதற்கு மேல் தேன் சாப்பிட வேண்டும்.

💊 ஆகவேதான் ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்றார்கள்.

💊 பசுநெய் போலவே புளியையும் 40 வயதுக்குள் இளமைத் துடிப்போடு இருக்கும் காலகட்டத்தில்தான் சாப்பிட வேண்டும்.

💊இள வயதினருக்கு புளி அவசியம் தேவை. சரியான அளவில் புளியை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மை வீறு கொண்டிருக்கும்.

💊 இப்படியாக பல நன்மைகள் புளியில் இருந்தாலும், அதை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தவில்லை என்றால் நேரெதிர் தீங்குகளுக்கு ஆளாக நேரிடும்.

💊புளி என்பது அமிலத்தன்மை உடையது என்பதால் ரத்தத்தில் உள்ள அமில காரத்தன்மையை சமநிலைப்படுத்த வேண்டி காரத்தன்மையுடைய தண்ணீர் நிறைய குடிக்க வேண்டி வரும்.

💊இதன் காரணமாகத்தான் புளியோதரை, பிரியாணி ஆகியவற்றை சாப்பிடும்போது தண்ணீர் நிறைய குடிக்கிறோம்.

💊 அப்படி தண்ணீர் குடிக்காமல் விடும்போது உடலில் உள்ள நீர் உறிஞ்சப் பட்டு மலச்சிக்கல் ஏற்படும். இது நாளடைவில் மூலத்தை ஏற்படுத்தவும் கூடும்.

புளிய மரத்தின் பாகங்களில் உள்ள மருத்துவ பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Wednesday 3 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-4)



Image result for tamarind tree images

"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பாகங்கள் பற்றி பார்த்தோம்.

பயன்கள்:-

புளிய மரம்:-

🌿புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் (Furniture) தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது.

🌿 மரவேலை செய்யக் கடினமானது. சக்கரம், கொட்டாப்புளி, உலக்கை, செக்கு, உரல், கரும்பலகை முதலியவற்றைச் செய்ய இது பயன்படுகிறது.

🌿எரிதிறன் 4909 கிலோ கலோரி ஆகும். புளியமரத்தைப் பிளந்து விறகாக எரிக்கலாம். துப்பாக்கிக்கு உரிய வெடிமருந்துத் தயாரிப்பில் சிகிகரி பயனாகிறது.

🌿மரப்பட்டையில் 7% மடனின் உள்ளது. பட்டையிலிருந்து கோந்து வடியும், புளியமரத்தைக் காற்றுத் தடைக்காக வளர்க்கலாம். இதனை வளர்த்தால் மண் அரிப்பு உண்டாகாது.

இலைகள்:-

🌿புளியம் இலையைக் கொண்டு பட்டுத்துணிகளுக்குப் பச்சை நிறச் சாயம் தோய்க்கலாம். புளியம் இலையுடன் அவுரி செடி நீலத்தைச் சேர்த்தால் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் கிடைக்கும்.

🌿பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது.

புளிய பழம்:-

🌿புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும்.

🌿 வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.

விதை (புளிய கொட்டை):-

🌿புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம்.

🌿புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும்.

🌿புளி விதைப் பொடியைத் துணித்தொழிற்சாலையில் பயன்படுத்துவர். ஜாம், ஜெல்லி, மார்மலேட் முதலியவற்றிற்குரிய ஜெல்லோஸ் தயாரிக்க இது உதவுகிறது.

🌿புளிக்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு துணிக்கு மெருகூட்டவும். சணல் நூல் தயாரிப்பிலும் செயற்கை இழைகள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

🌿 புளியங்கொட்டை தோலிலிருந்து 'டானின்' எடுக்கப்பட்டு தோல் பதனிடல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

புளிய மரத்தின் மருத்துவ பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-3)



Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் தன்மைகள் பற்றி பார்த்தோம்.

பாகங்கள்:-

🌿புளியமரத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, விதை, பருப்பு முதலியவை.

இலை:-

🌿புளிய மரம் இலைகள் மிக சிறியது.
பார்ப்பதற்கு நாட்டு கருவேல, சீமை கருவேல மற்றும் நெல்லி மரத்தின் இலைகள் போன்று காணப்படும்.

🌿புளிய இலை வெப்பத்தன்மை கொண்டது. இலையும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

பூக்கள்:-

🌿சிவப்பு மற்றும் மஞ்சள் நீளமுள்ள மலர்கள் கொண்டவை.

🌿 மலர்கள் 2.5 செ.மீ அகலம் (ஒரு அங்குல) ஆரஞ்சு அல்லது சிவப்பு கோடுகள் கொண்ட மஞ்சள் நிறத்தில் உள்ளன.

புளிய பழம்:-

🌿ஆறு சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது… இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான்.

🌿 அதில், புளிப்புச் சுவைக்காக உணவில் நாம் பயன்படுத்தும் விளைபொருள் புளி. அன்றாட உணவுகளில் சுவை  கூட்டுவதில்  புளிக்கு முக்கிய இடமுண்டு.

🌿புளியம்பழம்  3-8 அங்குல வளைந்த மேல் ஓட்டுக்களில் அடங்கியிருக்கும்.

🌿ஒரு ஓட்டில் (Pods) ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை விதையை மூடிய விழுதாக பழங்கள் இருக்கும்.

🌿புளிப்பும் இனிப்பு கலந்த பழங்கள், அமிலமும் சர்க்கரையும் சேர்ந்தவை. நன்றாக பழுத்தவுடன் மேலோடுகள் உடையும் நிலையில் இருக்கும். சுலபமாக மேலோட்டை உடைக்கலாம்.

🌿புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும்.

"பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய்"

 என்பது தமிழர் வழக்கம்.

🌿அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும்.
வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழவிளைச்சல் அதிகமாக இருக்கும்.

🌿புளியில் கால்சியம், வைட்டமின் 'பி' நிறைந்துள்ளது. இது தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு.

விதை:-

🌿தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும்.

🌿விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன.

🌿 பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன.

🌿வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின், நியாசின், கால்சியம், இரும்பு,  பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

🌿புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.

புளிய மரத்தின் பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Tuesday 2 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-2)


Image result for tamarind tree images


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

தன்மைகள்:-

🌳புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று.

🌳பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம்.

🌳இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.

🌳புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் வளரும்.

🌳அதிகமான கவனிப்பும் தேவையில்லை. சிறு செடிகளாக இருக்கும் போது உரங்கள் தேவை. மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது.

🌳உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு வளரும் புளியமரம், குளிரைத் தாங்காது. ஆனால் கடற்கரை ஓரங்களில் கூட வளரும்.

🌳வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது.

இரகங்கள்:-

🌳பிகேஎம். 1, உரிகம், தும்கூர், ஹாசனூர், ப்ரதிஸ்தான், டீ. டி எஸ் 1, யோகேஸ்வரி

புளிய மரத்தின் பாகங்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

Monday 1 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-1)


Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

🌳புளி நாம் உபயோகிக்கும் புளியைத் தரும் புளியமரம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது.

🌳 ஆனால், தொன்று தொட்டு இந்தியாவில் உபயோகப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தோன்றியதாக, கருதப்படுகிறது.

🌳 புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று.

🌳புளிய மரம் பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். குடும்பம் சிசால்பினியேசி) (Caesalpinioidaeae).

🌳 இம்மரத்தின் தாவரவியல் பெயர் டேமரிண்டஸ் இண்டிகா (Tamarindus indica L.) என்பதாகும்.

🌳தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பரவலாக காணப்படும் புளியமரங்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் ஓங்கி வளர்ந்து நிழல் தருகின்றன.

🌳புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள்.

🌳 வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும்.

🌳தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.

🌳புளியமரம் இதற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு.

 புளிய மரத்தின் தன்மைகள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠