Thursday 30 March 2017

ஒரு சிறு கேள்வியோடு...


அனைவருக்கும் வணக்கம்

ஒரு சிறு கேள்வியோடு இப்பதிவினை துவங்கிட எண்ணுகிறேன், கேள்வி மிக எளிது, தமக்கு தெரிந்த ஒரு 30 தாவரங்களின் பெயர்கள் மற்றும் அதன் இயல்பினை கூற முடியுமா?

என்னுடைய பதில் தெரியாது. உங்களுக்கு!!!


 ஏனெனில் நாம் எல்லோருக்கும் இயற்கை,மரம் மற்றும் செடிகள் பிடிக்கும் ஆனால் அதை பற்றி தெரிந்து கொண்டது  என்னமோ கொஞ்சம் தான்..

இப்படி நம்மை சுற்றியுள்ள  சிறு சிறு  தாவரங்களின் பெயர்களே தெரியவில்லை என்றால் இதில்  நாம் எப்படி இயற்கையையும் விவசாயத்தையும் காப்பாற்ற போகிறோம்!!?

இப்பொழுதே பாதி செடி மற்றும் மரங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப் பட்டுள்ளது.

 இதை நான் எப்படி பாதுகாக்க போகிறேன் என்று எனக்குள்  கேள்வி எழுந்தது. அதற்கு முதலில் நான் அது என்ன மரம்?  அதன் தன்மை என்ன?   அதன் பயன்கள்? போன்றவற்றை தெரிந்து  கொள்ள வேண்டும்... இதை நான் மட்டும் தெரிந்து கொண்டு எந்த  பயனும் இல்லை. இதை அனைவருக்கும் தெரியப் படுத்த விரும்புகிறேன்...  இதை எப்படி எடுத்து சென்று சேர்ப்பது என்று யோசித்த போது இதை ஒரு பதிவாக செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

"என்னை அறிவீரா???
(தாவரத்தின் குரல்)"

 என்ற தலைப்பில்  தினம் ஒரு மரம் விதம் ஒரு பதிப்பை பதிவு செய்ய உள்ளேன்....

இதில் என்ன இருக்கு  இது தான் எனக்கு தெரியுமே என்று உங்கள் மனதில் நினைத்தால் ஒரு ஆய்வு செய்து பாருங்களேன். நீங்கள் தெருவில் நடந்து செல்லுங்கள் அங்கு என்ன செடி உள்ளது? என்ன மரம் உள்ளது பார்த்து அதில் எத்தனை செடி மற்றும் மரங்களின் பெயர்கள்,பயன்கள்  தெரியும் என்று சிந்தித்து பாருங்கள்... முடிவு என்னவென்று உங்களுக்கு தெரியும்.!!!!


நன்றி : சதீஷ் (சச்சு) மற்றும் பாலமுருகன் ராமமூர்த்தி அண்ணா அவர்களுக்கு.

# த.முகேஷ்.

குறிப்பு :
                இதை பற்றி உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறேன்...

No comments:

Post a Comment