என்னை அறிவீரா??? -- பனை மரம்
உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி.
தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான்.
பனைமரம் தான் தமிழரின் அடையாளம்.
🌴 மலேசியா, ஈழம், மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா, தமிழகம் என தமிழர் வளர்ந்த இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது.
🌴 தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டது பனைமரம்!
🌴பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.
🌴இளம் பனைகள் "வடலி" என்று அழைக்கப்படுகின்றன.
🌴பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.
🌴தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும்.
🌴வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை.
🌴 இதனாலேயே கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு "பூலோகத்து கல்பகதரு" என்றார்கள் நம் முன்னோர்கள்.
🌴மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கையான அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர்.
🌴 ''2004-ல் சுனாமி வந்தபோது கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை.
🌴கடற்கரை ஓரங்களில் நிறையப் பனை மரங்களை நட்டாலே போதும். சுனாமி போன்ற பேராபத்துகள் வந்தால், மிகப் பெரிய அரணாக பனை மரங்கள் இருக்கும்.
🌴பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன.
🌴 பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம்.
🌴பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்கிறது.
🌴அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனைகளை அடையாளம் கண்டறியமுடியும்.
“குரும்பை யான் பனை ஈன்குலை ஒத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்புகளையுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவோர் வினை வீடே!’’
- என்று இறுதியாக திருஞானசம்பந்தர் பாடலில் ஆண் பனை, பெண் பனையாகி குரும்பைகளாக காய்த்துத் தொடங்குகின்றன என்று விளக்கியுள்ளார்.
பனை மரத்தின் பாகம், பயன்கள், மருத்துவ குணங்களை நாளைக்கு பார்ப்போம்.
நன்றி
இந்த தகவல்கள் சில புத்தகம், விக்கிப் பீடியா மற்றும் சில செய்தித்தாள்களில் இருந்து எடுக்கப் பட்டது.
#த.முகேஷ்.
No comments:
Post a Comment