"என்னை
அறிவீரா?? -- பனை மரம்
வணக்கம்
நேற்று பனை மரம் வளரும்
விதம் மற்றும் அதன் தன்மையை
பார்த்தோம்.
பயன் தரும் பாகங்கள்:-
🌴 நொங்கு, பனம்பழம்,
பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து,
பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
நொங்கு:-
🌴இந்த
பனம்பழமானது இளம் காய்களாக இருக்கையில்
நுங்கு என அழைக்கப்படுகிறது.
🌴 நுங்குக்கு என
ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது.
🌴இந்தப் பருவத்திலே
நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது
மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும்.
🌴இந்தப் பருவம்
தாண்டி சற்று முற்றி விட்டால்
இதன் சுவை குன்றி விடும்.
நன்கு முற்றி விட்ட பின்
🌴இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை
குறைந்து இறுக்கமாகக் காணப்படும்.
பனைப்பால்:-
🌴 பனைப்பால் (பதனீர்) என்பது பனை கித்துல் முதலானவற்றின்
பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும்.
🌴சேகரிக்கப்பட்ட சில
மணி நேரத்திலேயே இயற்கையிலுள்ள வளிமண்டல மதுவத்தினால் நொதித்தலடைந்து
கள்ளாக மாறும்.
🌴இதனைத்
தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும்.
🌴பனை மரத்தின்
பால் தெளுவு-தெளிவு எனப்படும்.
🌴இதையே சிறந்த
சுவையான சத்தான குடிநீராகும்.
🌴 ''பனம் பால், தாய்ப்
பாலுக்கு நிகரானது.
பனை மரத்தின் பாகங்கள் பனை பழம், பனைக்
கிழங்கு பற்றி நாளைக்கு பார்ப்போம்.
எழுத்து
#த.முகேஷ்